சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமை.. சென்னை பீச் ரோட்டில்.. கொரோனா டூட்டிக்கு போகும்போது.. லாரியில் சிக்கி பெண் போலீஸ் பலி

லாரியில் சிக்கி உயிரிழந்த பெண் போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: பீச் ரோட்டில் டூவீலரில் டியூட்டிக்கு சென்று கொண்டிருந்த பெண் போலீஸ் பவித்ரா விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்... கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் பவித்ராவின் தலை நசுங்கியதை கண்டு பொதுமக்கள் அலறி துடித்தனர்.. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர் பவித்ரா.. இன்று அவருக்கு நந்தனத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக டியூட்டி போட்டிருந்தனர்.. அதனால் பவித்ரா தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண் போலீசுடன் நந்தனத்துக்கு மெரினா பீச் வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

 lockdown: Women police die for lorry accident in Chennai marina beach road

பீச் ரோட்டில் கண்ணகி சிலை அருகே வந்தபோது, ஒரு கண்டெய்னர் லாரி பவித்ராவின் டூவீலரில் மோதியது. அதில் பின்னால் உட்கார்ந்திருந்த பவித்ரா தடுமாறி கீழே விழுந்தார்.. அவர் விழும்போது அவரது தலை, அந்த கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கொண்டது.. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து பொதுமக்கள் அலறி துடித்தனர்.. அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்... சம்பந்தப்பட்ட அந்த லாரி டிரைவரையும் கைது செய்தனர்.

 lockdown: Women police die for lorry accident in Chennai marina beach road

அவர் பெயர் ராஜசேகர்.. பாரிமுனை நோக்கி லாரி ஓட்டி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது... ஆனால் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கொரோனா டியூட்டிக்கு போன பவித்ரா, தலைநசுங்கி உயிரிழந்தது சக காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

English summary
lockdown: Women police die for lorry accident in Chennai marina beach road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X