சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. வெடித்த பிரச்சினை

தமிழகத்தில் வாக்காளர்கள் பலருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை என்பதால் மக்கள் வாக்களிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வாக்காளர்கள் பலருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை என்பதால் மக்கள் வாக்களிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் நாடு முழுக்க நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடந்து வருகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தலுக்காக வீட்டிற்கு செல்பவர்களுக்கு சரியாக பேருந்து ஏற்பாடு செய்யவில்லை என்று புகார் உள்ளது. அதேபோல் தமிழகம் முழுக்க பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யவில்லை.

யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி

வேறு பிரச்சனை

வேறு பிரச்சனை

இந்த நிலையில் தற்போது பூத் தொடர்பான வேறு சில பிரச்சனைகளும் எழுந்துள்ளது .இந்த தேர்தலில் சரியான பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யப்படவில்லை. யார் பூத் ஏஜென்ட், எங்கே நிற்கிறார் என்று எந்த வழி காட்டுதலும் வழங்கப்படவில்லை.

சிரமத்தில் மக்கள்

சிரமத்தில் மக்கள்

இதனால் வாக்களிக்க செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதேபோல் வாக்காளர்கள் பலருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை என்பதால் மக்கள் வாக்களிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பூத் சிலிப் இல்லை

பூத் சிலிப் இல்லை

பொதுவாக தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு வீடு தேடி சென்று பூத் சிலிப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் வீடு வீடாக பூத் சிலிப் வழங்காமல் அலுவலர்கள் மெத்தனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பூத் சிலிப் இல்லாமல் எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் தவித்து இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி எப்படி

கன்னியாகுமரி எப்படி

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் பூத் சிலிப்கள் குப்பையில் வீசப்பட்டு கிடந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதையடுத்து தற்போது மக்கள் பூத் சிலிப் இல்லாமலே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

English summary
Lok Sabha Election 2019: Major complacency in issuing Booth Slip, Tamilnadu people suffer to vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X