சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ் வருமா? வராதா? 20 மணி நேரமாக காத்திருந்த மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்!

சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்காத காரணத்தால் தற்போது சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    CMBT: பேருந்துகள் இல்லை..கோயம்பேட்டில் மக்கள் மீது போலீஸ் தடியடி- வீடியோ

    சென்னை: சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களுக்கு சரியாக பேருந்து வசதி செய்து கொடுக்காத காரணத்தால் தற்போது சென்னை கோயம்பேட்டில் பயணிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தில் பயணிகளுக்கு சரியான பேருந்து வசதி செய்து கொடுக்கப்படாத பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது.

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

    சீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி!! சீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி!!

    பல பயணிகள்

    பல பயணிகள்

    பல பயணிகள் இதுவரை படியில் தொங்கியும், பேருந்தின் மேல் கூரையில் உட்கார்ந்து கொண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள். மிகவும் மோசமான வகையில், ஆபத்தான நிலையில் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்து இருக்கிறார்கள்.

    சென்னை என்ன

    சென்னை என்ன

    அதே சமயம் சென்னையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து இன்னும் பல பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல காத்து இருக்கிறார்கள். 20 மணி நேரம் ஆகியும் இன்னும் இவர்கள் ஊருக்கு செல்வதற்கு பஸ் வரவில்லை. நேற்று மாலை ஊருக்கு செல்ல முயன்று இன்று காலை வரை பஸ் கிடைக்கமால் பல பயணிகள் பேருந்து நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    தற்போது அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏற்கனவே பெருங்களத்தூரில் தனியாக மக்கள் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இல்லை

    இல்லை

    அதே சமயம் நேற்று இரவு பேருந்து பிடித்த மக்களே இன்னும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமான பேருந்துகளை தேர்தலுக்காக தமிழக அரசு பயன்படுத்தி வருவதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.

    English summary
    Lok Sabha Election 2019: People in Koyembedu bus stand protesting against poor bus arrangements for elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X