சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!

தமிழகத்தில் பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ponnamaravathi News: பொன்னமராவதியில் கலவரம்.. 1,000 பேர் மீது வழக்குப்பதிவு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

    அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடந்தது. அதேபோல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்தது.

    இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை

    கலவரம்

    கலவரம்

    இதில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது பாப்பிரெட்டிபட்டி பகுதியில் பெரிய அளவில் கலவரம் நடைபெற்றது. இரண்டு பிரிவினருக்கு இடையே அங்கு பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு தலித் மக்களின் வீடுகள் அடித்து உடைக்கப்பட்டது.

    பாப்பிரெட்டிபட்டி பிரச்சனை

    பாப்பிரெட்டிபட்டி பிரச்சனை

    அதேபோல் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் புகார் வைத்து இருந்தது. 5க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி முறைகேடு செய்தனர் என்றும் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இந்த கலவரம் மற்றும் புகாரை தொடர்ந்து இதுகுறித்து அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து இருந்தார். தற்போது இந்த அறிக்கையை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    அதன்படி பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லியில் 1 வாக்குச்சாவடி, கடலூரில் 1 வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் விரைவில் முடிவெடுத்தது தேர்தல் தேதிகளை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha Election 2019: Ten polling booths may go for re-election in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X