சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கூரையில் அமர்ந்து பயணம்.. பீகார், உ.பி நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழகம்!

லோக்சபா தேர்தலில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    CMBT: பேருந்துகள் இல்லை..கோயம்பேட்டில் மக்கள் மீது போலீஸ் தடியடி- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.

    லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி! லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!

    பேருந்து இல்லை

    பேருந்து இல்லை

    ஆனால் வாக்களிக்க செல்லும் மக்களுக்கு தமிழக அரசு சார்பாக போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை.இன்று தமிழகம் முழுக்க தேர்தல் காரணமாக பொது விடுமுறை. இதனால் நேற்று சென்னை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    பெண்கள் இல்லை

    பெண்கள் இல்லை

    ஆனால் வாக்களிக்க செல்லும் மக்கள் பல இடங்களில் போதிய பேருந்து இல்லாமல் கடும் அவஸ்தை பட்டனர். முக்கியமாக பெண்கள் பேருந்து இல்லாமல், காலை 3 மணி, 4 மணி வரை கூட காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.பல இடங்களில் மக்கள் பேருந்து கிடைக்காமல், கிடைத்த பேருந்தின் மேல் பாகத்தில் அமர்ந்து சென்றனர்.

    பல இடங்களில் இதே நிலை

    பல இடங்களில் இதே நிலை

    சிலர் படிகளில் தொற்றியபடி சென்றனர். இன்னும் பலர் வாக்களிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டு திரும்பி சென்று இருக்கிறார்கள். சென்னை மட்டுமில்லாமல், கோவை, பெங்களூர், ஓசூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய அனைத்து நகரங்களிலும் இதே நிலைதான் நீடித்தது. தேர்தலுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு கூறியும் போக்குவரத்து தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. கிட்டத்தட்ட பீகார் , உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் ரயிலில் முண்டியடித்து செல்வது போல தமிழக மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

    கூடுதல் பேருந்துகள்

    கூடுதல் பேருந்துகள்

    இந்த நிலையில் பேருந்து இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் வாக்குவாதம் செய்தனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசாருடன் இளைஞர்கள் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் செய்ய முயன்ற மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினார்கள். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக இன்று வாக்கு சதவிகிதம் பெரிய அளவில் குறைய கூட வாய்ப்புள்ளது.

    English summary
    Lok Sabha Election 2019: Tamilnadu voters face a huge problem due to less number of buses.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X