சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்'

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக!- வீடியோ

    சென்னை: திமுக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி 38 இடங்களில் இந்த முறை வெற்றிபெற்றாலும் அதிமுக எப்படி வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததோ அதுபோல் பாஜக ஆட்சியமைப்பதை, திமுக வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

    திமுக 20 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. இதேபோல் அதன் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளாக மதிமுக, ஐஜேகே, விசிக, கொமதேக உள்ளிடவை நின்றுள்ளன.

    அந்த வகையில் 24 இடங்கள் திமுக வசம் உள்ளன. இதில் 24 இடங்களிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தேனியை தவிர காங்கிரஸ் தான் போட்டியிட்ட தொகுதிகளில் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தனிமெஜாரிட்டி

    தனிமெஜாரிட்டி

    இந்நிலையில் பாஜக கூட்டணி 320 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டுமே தனித்து 289 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே பாஜக யாருடைய ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்க முடியும்.

    38 இடங்களில் வெற்றி

    38 இடங்களில் வெற்றி

    கடந்த முறை அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்ற போதும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தான் செயல்பட்டது. அதனால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதே நிலை தான் திமுகவுக்கும் ஏற்பட போகிறது.

    கேள்வி கேட்கலாம்

    கேள்வி கேட்கலாம்

    திமுக கூட்டணி 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் ஏற்படும். அதேநேரம் வலுவான எதிர்க்கட்சியாக, அமையப்போகும் மோடி அரசை எதிர்த்து கேள்விகள் கேட்கலாம். மற்றபடி ஆட்சி அதிகாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது.

    கைகொடுக்குமா?

    கைகொடுக்குமா?

    அதேநேரம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 12 இடங்கள் வரை தான் முன்னிலையில் உள்ளதால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது சாத்தியமாக என்பது முழு நிலவரம் வந்த பிறகே சொல்ல முடியும். எனவே திமுகவின் வெற்றியால் அவர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி தரப்போவதில்லை.

    English summary
    lok sabha election results 2019 live updates:bjp will form government in india, without tamilnadu political parties support
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X