சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவங்க எல்லாம் தோற்போம் என நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க.. படுதோல்வி கண்ட முன்னாள் அமைச்சர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 8 முன்னாள் அமைச்சர்கள் இந்த முறை மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

lok sabha election results 2019 live updates: 8 ex ministers loss in tamil nadu lok sabha polls

இந்த தேர்தலில் முந்தைய ஆட்சி அமைச்சர்களாக இருந்த கேபி முனுசாமி கிருஷ்ணகிரியிலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையிலும், எம்எஸ்எம் ஆனந்தன் திருப்பூரிலும், என்ஆர்.சிவபதி பெரம்பலூரிலும் போட்டியிட்டனர். இங்கு 4 பேருமே தோல்வியை தழுவினர்.

இதேபோல் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன் தர்மபுரியிலும், செந்தமிழன் ஆரணி தொகுதியிலும், இசக்கி சுப்பையா தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட தாமதத்தால் தோல்வி.. காரணம் சொல்லும் கர்நாடக அமைச்சர் வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட தாமதத்தால் தோல்வி.. காரணம் சொல்லும் கர்நாடக அமைச்சர்

மேலும் பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவார். அவரும் தோல்வியை தழுவினார்.

பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியை தழுவி உள்ளார். பாமகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியிலும், ஏகே மூர்த்தி அரக்கோணம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

English summary
lok sabha election results 2019 live updates: 8 ex ministers loss in tn lok sabha polls including pon radha krishnan, kp munusamy, anbumani ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X