சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ரெண்டு பேருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டது திமுக கூட்டணிக்குதான்.. அசரடிக்கும் புள்ளி விவரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அதிமுகவுடன் அந்த கட்சி அமைத்த, கூட்டணி பெரும் தோல்வியில் சென்று முடிவடைந்துள்ளது.

    தமிழத்தில் திமுக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிக வாக்கு வங்கியை பெற்று அசத்தியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்கு வங்கியை பார்த்தால் கண்டிப்பாக அதிர்ச்சிதான் கிடைக்கும்.

    சீட்டுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதம் என்ன என்பதும் அரசியல் கணக்கில் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும் எவ்வளவு வாக்குகளை தமிழகத்தில் பெற்றன என்பது தொடர்பாக ஒரு பார்வை.

    பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ் சொல்கிறார் பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    திமுக மட்டுமே தனித்து 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்- 12.76%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2.40%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2.43%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1.11% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் என்பது, 51.46% ஆகும்.

    சரிவு

    சரிவு

    அதிமுக மட்டும் தனித்து- 18.48% வாக்குகளை பெற்றுள்ளது. பாமக- 5.24%, பாஜக- 3.66%, தேமுதிக- 2.19% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், அதிமுக கூட்டணி மொத்த ஓட்டு வங்கி 29.57% மட்டுமேயாகும். பிறர் 17.11 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியுள்ளனர்.

    குறைந்த அதிமுக ஓட்டுக்கள்

    குறைந்த அதிமுக ஓட்டுக்கள்

    அதிமுகவின் வாக்கு சதவீதம், கடந்த லோக்சபா தேர்தலில் 44.9%. அதை ஒப்பிட்டால், இப்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த முறை அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது. மேலும் 37 தொகுதிகளை வென்றது. ஆனால் இம்முறை தமிழகத்தில் வெறும் 20 தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட்டது. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    அதேநேரம் திமுகவின் வாக்கு வங்கி என்பது அதிகரித்துள்ளது. கடந்த முறை காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டது திமுக. ஆனால் ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை. இம்முறை 20 தொகுதியில் நேரடியாக திமுகவும், மேலும் 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர்களும் களம் கண்டனர். இதன் அடிப்படையில், வாக்கு வங்கி அந்த கட்சிக்கு கிடுகிடுவென கூடியுள்ளது. மொத்த, தமிழகத்தில், பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை திமுக கூட்டணி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பெரும், தோல்வியை சந்தித்து விட்டது என்றுதான் அர்த்தம்.

    English summary
    Here is the detailed story of political parties and their vote share in Tamil Nadu where DMK Alliance has got more than 50 percentage of votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X