சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக ரூ.2400 கோடி; திமுக ரூ.800 கோடி; அமமுக ரூ.300 கோடி... லோக்சபா தேர்தலில் வாரி இறைத்த கணக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் பணத்தை வாரி இறைத்த கட்சி எது?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அதிகபட்சமாக ரூ2400 கோடி செலவு செய்துள்ளதாக அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ரூ800 கோடியும் அமமுக ரூ300 கோடியும் வாரி இறைத்துள்ளனவாம்.

    தேர்தல் களம் என்றாலே பணம் மூட்டை மூட்டைகளாக இறக்கிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. வாக்காளர்களுக்கு ரூ1,000, ரூ500 என வேட்பாளர் ஒரு தொகையை நிர்ணயிப்பார்.

     lok sabha elections 2019 and tn parties expenses

    கட்சி நிர்வாகிகளோ அதில் கமிஷன் எடுத்துக் கொண்டு ரூ700, ரூ200 என மக்களுக்கு வழங்குவார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் கைகளுக்கு வந்து சேரும் இந்த பணத்துக்காக ஒவ்வொரு கட்சியிலும் வெட்டு குத்து கதைகள் ஏராளம்.

    தற்போதைய லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களிலும் இந்த நிலைமை மாறவில்லை. முன்பைவிட படுபட்டவர்த்தனமாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

    கட்சிகளில் அதிமுக ரூ2400 கோடி; திமுக ரூ800 கோடி மற்றும் அமமுக ரூ300 கோடியை இறக்கியிருந்ததாம். வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர்தான் அதிகபட்சமாக ரூ150 கோடி செலவழித்திருக்கிறாராம்.

    4 தொகுதி இடைத் தேர்தல்.. இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது 4 தொகுதி இடைத் தேர்தல்.. இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது

    துணை முதல்வர் ஓபிஎஸ் ரூ120 கோடி, தயாநிதி மாறன் ரூ50 கோடி, ஜெகத்ரட்சகன் ரூ50 கோடி, துரைமுருகன் ரூ35 கோடி, நயினார் நாகேந்திரன் ரூ50 கோடி, பொன். ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் ரூ50 கோடி, அன்புமணி ரூ60 கோடி, பழனியப்பன் ரு15 கோடி செலவழித்துள்ளார்களாம்.

    திண்டுக்கல் திமுக வேட்பாளர் வேலுச்சாமி சீட்டுக்கே ரூ30 கோடி செலவு செய்தார் என்பது அப்பகுதி மக்களின் பேச்சாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    According to the sources, AIADMK Party sepnt Rs2,400 crore for the Loksabha Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X