சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓட்டு போட லீவ் தராவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்... தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலையொட்டி, விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல், நாளை நடக்கிறது. வாக்காளர்கள் அனைவரும் கடமையாற்ற வேண்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு, '132பி'யின்படி தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

Lok Sabha Elections 2019: Leave for workers, Labor Department warns

எனவே, அனைத்து வேலை அளிப்போர், தொழில் வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.மீறி நடத்துவோர் குறித்து புகார் அளிக்க, மாநில - மாவட்ட அளவில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தவரை, கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பிராட்வே உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 98401 13313 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம்.

அந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்!அந்த மர்ம நபரின் போன் கால்.. வேகமாக விரைந்த அதிகாரிகள்.. கனிமொழி வீட்டு ரெய்டுக்கு இதுதான் காரணம்!

கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட தென் சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 79048 02429 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம்.

அண்ணா நகர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், அரும்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், பூங்கா நகர் உள்ளிட்ட, மத்திய சென்னை பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள், உதவி ஆணையர், 98400 90101 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The control room is set up on behalf of the Labor Department to complain about Non- holiday companies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X