சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா போட்ட வழக்கின் நோக்கமும்.. தினகரனின் திட்டமும் நிறைவேறுமா?.. மே 23ல் தெரியும்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைப்பது சசிகலா, தினகரன் குடும்பத்தின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் ஆதிக்கத்தை அதிமுகவில் காலி செய்து அந்த இடத்துக்கு வர விரும்புவதாகவே தெரிகிறது. உண்மையில் தினகரன் சசிகலாவுக்கு அதிமுகவில் உள்ள வாய்ப்பு என்பது என்பத மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு தெரிந்துவிடும்.

தேன்கூடாக இருந்த அதிமுக என்ற கட்சிக்கு ஜெயலலிதா ராணி தேனீயாக இருந்தார். அவர் இறந்த பின்னர் அதிமுக என்ற தேன்கூடு சிலரால் கலைந்தது. ஆனால் சில சூழல்களுக்கு பிறகு தேன்கூடு மீண்டும் வந்தது.

உண்மையில் அதிமுக என்ற தேன்கூடு தானாக கலைந்ததா அல்லது யாரேனும் சூழ்ச்சி செய்தார்களா என்பது அங்கிருக்கும் தலைமைகளுக்குத்தான் தெரியும் என்பதால், அதை பற்றி இப்போது பேச வேண்டியதில்லை.

சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்! சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்!

ஒபிஎஸ் உள்ளே

ஒபிஎஸ் உள்ளே

இப்போது சொல்லவருவது தினகரன் மற்றும் சசிகாவை பற்றியதுதான். ஒபிஎஸ் வெளியில் போனதால் உடைந்த அதிமுக தன் பெயரையும், இரட்டை இலை சின்னத்தை இழந்தது. அதன் பிறகு ஒபிஎஸ் சேர்க்கப்பட்டார். அதனால் கட்சியும் சின்னமும் கிடைத்தது. இதற்கிடையில் ஒபிஎஸ் குரூப்பை தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்த்தார்கள். ஆனால் கடைசியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்றி தினகரன் ஆதரவாளர்களை வெளியேற்றினார்கள்.

சாதித்து என்ன

சாதித்து என்ன

ஒரு பக்கம் சசிகலா சிறைக்கு போன நிலையில் சட்டப்போராட்டம் நடத்தி பார்த்த தினகரன் அதிமுகவை கைப்பற்ற முடியாததால், அமமுக இயக்கத்தை கட்சியாக மாற்றிவிட்டார். இதன் மூலம் அவர் சாதித்தது என்ன என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.

நீதிமன்றம் தீர்மானிக்கும்

நீதிமன்றம் தீர்மானிக்கும்

இன்னொரு புறம் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்துவிட்டு அதனை வாபஸ் பெறுவதாக மாற்றிக்கூறியதை ஏற்க முடியாது என சசிகலா வழக்கு போட்டுள்ளார். ஒருவேளை இந்த வழக்கு சசிகலாவுக்கு சாதகமாக மாறினால் கட்சி மற்றும் ஆட்சி எல்லாமே அவர் மயமாக மீண்டும் மாறிவிடும். அதன்பிறகு தினகரன் அமமுகவை அதிமுகவுடன் இணைக்கலாம்.

10 சதவீதம் வாக்கு

10 சதவீதம் வாக்கு

ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாக வேண்டுமென்றால் மே23ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிகையில், தினகரன் கை ஓங்கி இருக்க வேண்டியது அவசியம். அப்படி வாராமல் போனாலும் குறைந்த பட்சம் 10 சதவீதம் வாக்குகளை கைப்பற்றினால் தான் அடுத்து வலிமையான இயக்கமாக அவரது இயக்கம் மாற முடியும். அதன் மூலம் அதிமுகவுடன் அவர் பேச முடியும்.

தினகரனுக்கு சாதகம்

தினகரனுக்கு சாதகம்

இப்போது உள்ள நிலவரப்படி மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினகரனுக்கு சாதகமாக வந்தால் அதிமுகவில் சசிகலா, தினகரன் கை மீண்டும் ஓங்கும். இல்லாவிட்டால் பழனிச்சாமி மற்றும் ஒபிஎஸ் ஆகியோர் அதிமுகவின் வலிமையான தலைவராகி கட்சியை வழக்கம் போல் கட்டுப்பபாட்டில் வைத்திருப்பார்கள்.

மே 23ம் தேதி

மே 23ம் தேதி

எனவே சசிகலா போட்ட வழக்கின் நோக்கமும், தினகரனின் நோக்கமும் ஒரே புள்ளியில் இணைய வேண்டும் என்றால் மே 23ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில அமமுக பெரியதாக சோபிக்கவில்லை என்றால் அமமுக மட்டுமே சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமாக இருக்கும். அதிமுக அல்ல...!

English summary
lok sabha elections 2019 : may 23 2019 important day for sasikala and dinakaran team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X