சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த சீட்தான் சிக்கல்.. அதை எப்படி கொடுப்பது.. தமிழிசைக்கு இடம் ஒதுக்குவதில் நீடிக்கும் பிரச்சனை!

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இடம் ஒதுக்குவதில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருவதால், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசைக்கு இடம் ஒதுக்குவதில் நீடிக்கும் பிரச்சனை!- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இடம் ஒதுக்குவதில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருவதால், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இன்னும் பாஜக, காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறது.

    ஆனால் பாஜக எப்போது வேட்பாளர்களை அறிவிக்க போகிறது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா? அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா?

    இடங்கள்

    இடங்கள்

    அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. இந்த ஐந்து இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள்தான் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    பட்டியல் தயார்

    பட்டியல் தயார்

    இதற்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே தயாராகிவிட்டது. இந்த பட்டியலை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் ஏற்கனவே பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துவிட்டார். ஆனால் பாஜக தலைமை இதன் மீது எந்த விதமான முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த தேர்தலில் கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே நான்கு தொகுதிகளை பாஜகவின் முக்கிய உறுப்பினர்கள் பெற்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் ஒரே தொகுதி தூத்துக்குடி தொகுதிதான். இங்குதான் போட்டியிட தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

    முடியாது

    முடியாது

    இந்த இடத்தை தமிழிசைக்கு கொடுக்க பாஜக விரும்பவில்லை என்பதுதான் தற்போது பிரச்சனையாக உள்ளது. தூத்துக்குடியில் பாஜக எப்படியும் தோல்வி அடையும் என்று பாஜகவின் சில முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர். முக்கியமாக, அங்கு திமுக எம்.பி கனிமொழி வேறு போட்டியிடுகிறார். இதனால் பாஜகவின் தமிழக தலைவர் அங்கு போட்டியிடுவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் தமிழிசை

    ஆனால் தமிழிசை

    ஆனால் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிட முடியவில்லை என்றால் வேறு எங்குமே போட்டியிட முடியாது. மற்றவர்கள் போட்டியிடும் சமயத்தில் தலைவராக இருந்து கொண்டு போட்டியிடாமல் இருப்பது பெரிய பின்னடைவாக மாறும். இதனால் தற்போது தமிழிசை கண்டிப்பாக தூத்துக்குடியில் போட்டியிட போவதாக விடாப்பிடியாக இருக்கிறார்.

    இதுதான் பிரச்சனை

    இதுதான் பிரச்சனை

    இதனால்தான் தற்போது பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் குழப்பம் நீடித்து வருகிறது. இன்று மாலைக்குள் இதில் சரியான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இன்று மாலையே வேட்பாளர் பட்டியல் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

    English summary
    Lok Sabha Elections 2019: Why Tamilnadu BJP is making too late in releasing candidates list? Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X