சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த 7 நொடிதான் முக்கியம்.. அதிக கவனம் பெறும் விவிபாட் எந்திரம்.. இப்படித்தான் இயங்குகிறது!

லோக்சபா தேர்தலில் இந்த முறை புதிதாக பயன்படுத்தப்பட்ட விவிபாட் எந்திரங்கள் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்?

    சென்னை: லோக்சபா தேர்தலில் இந்த முறை புதிதாக பயன்படுத்தப்பட்ட விவிபாட் எந்திரங்கள் பெரிய வைரலாகி உள்ளது. இது எப்படி செயல்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளால் விளக்கப்பட்டுள்ளது.

    பலரும் எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

    இந்த லோக்சபா தேர்தலில் விவிபாட் எந்திரங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்த முழு விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எப்படி

    மின்னணு வாக்குப்பதிவு எப்படி

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் விவிபாட் ''verifiable voter paper audit trail'' எனப்படும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது. ஏற்கனவே இந்த ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் சில மாநிலங்களில் நடைமுறையில் இருந்தது. அதை இந்த முறை நாடு முழுக்க பயன்படுத்தினார்கள்.

    விவிபாட் எப்படி

    விவிபாட் எப்படி

    இது மிக எளிதாக இயங்க கூடியது. வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது விவிபாட் எந்திரத்தில் ஒரு பேப்பர் ஸ்லிப் பதிவாகும். இந்த ஸ்லிப்பில் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்று விவரம் பதிவாகி இருக்கும். இதை வாக்காளர் கண்ணாடி பேழைக்குள் இருந்து பார்த்து சோதித்துக் கொள்ள முடியும். இது 7 நொடிகள் வெளியில் தெரியும்படி இருக்கும்.

    சீட்டு ஏன்

    சீட்டு ஏன்

    அதன்படி இந்த சீட்டு உள்ளே சென்றுவிடும். இது உள்ளே சென்றதும் ஒரு பீப் சத்தம் கேட்கும். இந்த விவிபாட் எந்திரங்களை அதன்பின் வாக்கு எண்ணிக்கையின் போது மட்டுமே வெளியில் எடுப்பார்கள். ஒரு தொகுதியில் மொத்தம் 5 விவிபாட் எந்திரங்கள் சோதனை செய்யப்படும்.

    சோதனை செய்யப்படும்

    சோதனை செய்யப்படும்

    விவிபாட் எந்திரங்களை வைத்து மொத்தம் மூன்று கட்ட சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் இதில் பதிவாகி இருக்கும் வாக்குகள், வாக்குப்பதிவு எந்திரங்களில் இருக்கும் வாக்குகளுடன் சோதனை செய்யப்படும் . அதாவது விவிபாட் எந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு 1000 வாக்குகள் இருந்தால், வாக்குப்பதிவு எந்திரத்தில் அதே 1000 வாக்குகள் பதிவாகி இருக்கிறதா என்று சோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாமதம் ஆகும்

    தாமதம் ஆகும்

    இதனால் வாக்குபதிவில் முறைகேடு நடந்துள்ளதா என்று கண்டுபிடிக்கப்படும். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விவிபாட் எந்திரங்களால் தேர்தல் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha Elections Counting 2019: What is VVPAT machine, How it is working actually?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X