சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது? அதல பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை!

லோக்சபா தேர்தலில் அதிமுக கட்சி மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது?அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி

    சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக கட்சி மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. யாரும் நினைக்காத அளவிற்கு அதிமுக தமிழகத்தில் தோல்வி அடைந்துள்ளது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் பாதி வெளியாகிவிட்டது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும்பான்மை அடையும் நிலையை நோக்கி சென்றுள்ளது.

    பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டும் நிலைக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

    அதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக அதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக

    தமிழகத்தில் எப்படி

    தமிழகத்தில் எப்படி

    ஆனால் தமிழகத்தில் நிலை அப்படியே வேறாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தில் 38 தொகுதிகளில் 36 தொகுதியில் திமுகதான் முன்னிலை வகிக்கிறது. திமுக தான் போட்டியிட்ட 20 தொகுதிகளில் 19ல் வெற்றிபெற்று இருக்கிறது.

    அதிமுக எப்படி

    அதிமுக எப்படி

    ஆனால் அதிமுக மிக மோசமான தோல்வியை நோக்கி சென்றுள்ளது. அதிமுக தான் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அதிமுக தான் போட்டியிட்ட அனைத்திலும் இரண்டு, அல்லது மூன்றாவது இடத்தைத்தான் பெற்றுள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    அதிமுக கூட்டணி மொத்தம் 2 இடங்களில் வென்றுள்ளது. அதில் பாமக அன்புமணி ஒருவர், பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகப்பெரிய கட்சியான அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

    மிக மோசம்

    மிக மோசம்

    சென்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வென்றது. மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக தேசிய அளவில் உருவெடுத்தது. ஜெயலலிதா அப்படி விட்டுச் சென்ற அதிமுக கட்சியை, மிக மோசமான நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தள்ளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha Elections Results 2019: AIADMK faces one of the worst results ever in history.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X