சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐந்து இடங்களை அள்ள போகும் அமமுக.. தினகரனுக்கு குட் நியூஸ் சொல்லும் நியூஸ் எக்ஸ் சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் அமமுக 5 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் 7 கட்டமாக தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நியூஸ் எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய கட்சியான டிடிவி தினகரனின் அமமுக தனியாக தேர்தலை சந்தித்தது.

கல்வெட்டில் எம்பி ரவீந்திரநாத்குமார் என போட்டது வீணாகாது போலயே.. எக்ஸிட் போல் கூறும் சேதி! கல்வெட்டில் எம்பி ரவீந்திரநாத்குமார் என போட்டது வீணாகாது போலயே.. எக்ஸிட் போல் கூறும் சேதி!

அமமுக ஐந்து இடங்கள்

அமமுக ஐந்து இடங்கள்

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் அமமுக 5 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கோவை, மதுரை, பொள்ளாச்சி, திருச்சிராப்பள்ளியில் அமமுக வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேனி தொகுதி

தேனி தொகுதி

தேனி தொகுதியில் அமமுகவின் மிக முக்கியமான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். ஆனால் அவர் தேனி தொகுதியில் தோல்வி அடைவார் என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. தேனி அதிமுக வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் மகன் ஓ.ரவிந்திரநாத் வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

அதேபோல் கொங்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளை அமமுக கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கோவையில் அப்பாதுரை வெற்றிபெறுவார், பொள்ளாச்சியில் எஸ். முத்துக்குமார் வெற்றிபெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய தமிழ்நாடு

மத்திய தமிழ்நாடு

அதேபோல் மத்திய தமிழ்நாட்டில், மதுரை, திருச்சியில் அமமுக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. திருச்சியில் சாருபாலா தொண்டைமான், மதுரையில் டேவிட் அண்ணாதுரை வெற்றிபெறுவார்கள் என்று கணித்துள்ளது.

முதல் தேர்தல்

முதல் தேர்தல்

இந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் மற்ற கட்சிகளான மநீம மற்றும் நாம் தமிழர் இரண்டும் எந்த இடத்திலும் வெல்லாது என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. ஆனால் அமமுக மட்டும் ஐந்து இடங்களை அள்ள போவதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Lok Sabha Exit Poll Results 2019: AMMK will win 5 seats in Tamilnadu says News x.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X