சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாபா இது.. செம 'செட்டிங்'கா இருக்கும் போலயே.. எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Exit Polls 2019 : எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்!

    சென்னை: எக்ஸிட் போல் முடிவுகள் மக்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை நிராகரித்துள்ளனர். இது பாஜ ஆதரவு எக்ஸிட் போல் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டனர்.

    அதெப்படிப்பா சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் பாஜகவுக்கு இத்தனை சீட்டை அள்ளிக் கொடுத்துள்ளீர்கள் என்று மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

    அதை விட முக்கியமாக, நேற்று நடந்த கடைசிக் கட்ட தொகுதிகளில் எப்படி மின்னல் வேகத்தில் கருத்துக் கணிப்பு அதை முடிவில் கொண்டு வந்தனர். லாஜிக்கே இல்லையே என்றும் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    சர்ச்சை தேர்தல்

    சர்ச்சை தேர்தல்

    நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சர்ச்சைகளுடன் இந்த தேர்தலை நடத்தி முடித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக வட இந்திய ஊடகங்கள் நடத்தி வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளன.

    கியாரே செட்டிங்கா

    கியாரே செட்டிங்கா

    பெரும்பாலானவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். நிராகரித்துள்ளனர். இது டுபாக்கூர், செட்டப், நம்ப முடியாதது, லாஜிக்கே இல்லை என்று மக்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். காரணம் சில ஊடகங்கள் வெளியிட்ட தவறான புள்ளி விவரங்கள்.

    காமெடி

    குறிப்பாக மக்கள் நீதி மய்யம் போட்டியிடாத காஞ்சிபுரம் தொகுதியில் அக்கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைக்கும் என ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தி மக்களிடையே பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியே போட்டியிடலையே எப்படி இத்தனை வாக்குகள் கிடைக்கும் என மக்கள் கலாய்த்து வருகின்றனர்.

    ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டவருமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள டிவீட்டில், ‘எக்ஸிட் போல்' ( exit poll) முடிவுகள் காட்டப்போவது அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பையல்ல; நம் தொலைக்காட்சி சேனல்களின் நம்பகத்தன்மையைத்தான்! என்று கூறியிருந்தார்.

    சாத்தியமில்லை

    மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் வெளியிட்டுள்ள டிவீட்டில், வாக்களித்து வந்துவிட்ட பிறகு நீண்ட நேரம் கழித்து யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டால் பெரும்பாலும் வாக்காளர்கள் மாற்றி கூறுவார்கள். எனவே எக்ஸிட் போல் என்றால் வாக்கு சாவடியில் இருந்து வெளியே வந்தவுடன் கேட்க வேண்டும். இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை என்பது என் கருத்து.

    யாராச்சும் பார்த்தீங்களா

    இது ஒரு ஆசிரியரின் கருத்து.. கருத்துக்கணிப்பு, கருத்துக்கணிப்புன்னு சொல்றாங்க நானெல்லாம் ஒரு நாள் வீடு தங்காம ஊர் சுத்துற ஆளு,எங்ஙனக்குள்ளையாச்சும் யாரும்,யாருகிட்டையும் ஒருத்தர் கூட கருத்து கேட்டு நான் பார்க்கல நீங்க பாத்திங்களா??

    போட்டியிடலையே

    தந்தி : கவலபடாதிங்க #காஞ்சிபுரத்துல 6% வாக்கு பெறுவீங்க
    மய்யம் : எப்புடி முடியும் நாங்கதான் போட்டியிடவே இல்லையே
    தந்தி : போட்டியிடல?

    கருத்துக் கணிப்பு நாடகம்

    கருத்துக்கணிப்பு எனும் நாடகம்! தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்களில் 1% பேர் என்றாலும் 6 லட்சம் பேரிடம் எடுக்கனும்.
    10 ஆயிரம் பேரிடம் சாம்ப்பிள் எடுப்பதே அபத்தம்
    1000-ல் ஒருவரிடம் சேம்ப்பிள் பார்த்தால் கூட 60000 பேரிடம் எடுக்கனும்.
    இது 6 கோடி வாக்காளர்களை பிரதிபலிக்க வாய்ப்பே இல்லை

    அய்யோ!

    இது அல்டிமேட் கிண்டல்.. வார்த்தையே இல்லை விவரிக்க!

    English summary
    Lok Sabha Exit Polls 2019 Live News Updates in Tamil. People have expressed their dissent over the conduct of exit polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X