சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ., கருணாநிதி மரணத்தை வைத்து அரசியலா?... சவால் மேல் சவால்.. வெல்லப் போவது யாரு

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான அனைவரையும் சிறைக்கு அனுப்புவோம் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கொக்கரித்து வருகிறார்.

அதே நேரம், தேர்தல் முடிந்தவுடன்,கருணாநிதியை 2 ஆண்டு வீட்டு சிறையில் வைத்தவர்களை உரிய முறையில் விசாரிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்புடன் கூறி வருகிறார்.

நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து மாறி, மாறி சவால் விடுத்து வருகின்றனர்.. முதலமைச்சரும்... எதிர்க்கட்சித் தலைவரும்...

கருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம் கருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

 கருணாநிதி சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு

அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்படும் பாஜக தலைவர் அமித்ஷாவை கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், பிரச்சார மேடைகளில் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த உடன் விசாரிக்கப்படும் என்கிறார்.

 வீட்டுச் சிறை

வீட்டுச் சிறை

அதே நேரம், ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி தரும்விதமாக பேசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவராக இருந்த கருணாநிதியை இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் என்றும், கலைஞரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் கொந்தளிப்புடன் கூறி வருகிறார்.

 அனுமதி மறுத்த பழனிசாமி

அனுமதி மறுத்த பழனிசாமி

உடல்நலக்குறைவால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த, கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்திற்கு அருகே உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்கப்பட்ட போது, முதலமைச்சர் பழனிசாமி அனுமதி மறுத்தார். நீதிமன்றம் வரை சென்று, பின்னர், சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 தலைவர்களின் மரணம்

தலைவர்களின் மரணம்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு கட்சிகளின் தலைமைகளும், தலைவர்களின் மரணத்தை வைத்து அரசியலாக்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள். யாருக்கு சோதனை காத்துள்ளது என்பது போக, போக தெரியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மாற்றுக்கட்சி தலைவர்களுக்காக வாய்ஸ் தரும் இன்றைய தலைமைகள், அன்றைய காலகட்டத்தில் குரல் எழுப்பாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

English summary
Controversial row: Is that Politics On jayalalitha And Karunanidhi's Death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X