சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்.. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறவும் இன்று கடைசி நாளாகும்.

Loksabha elections 2019: The final candidate list release This Evening

தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி, 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று இறுதி நாளாகும். பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.

ரூ.20 டோக்கன் தந்தவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம்.. மக்கள் ஏமாற மாட்டார்கள்.. கே.டி.ஆர் விமர்சனம் ரூ.20 டோக்கன் தந்தவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம்.. மக்கள் ஏமாற மாட்டார்கள்.. கே.டி.ஆர் விமர்சனம்

அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 43 வேட்பு மனுக்களும் குறைந்தபட்சமாக நிலைகளில் 10 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்படுவதை தொடர்ந்து, பிரச்சாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

English summary
Loksabha elections 2019: The final candidate list release This Evening; Last day to withdraw nominations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X