சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் இப்போ இந்தியா மேப்.. மெஜாரிட்டி காவிதான்.. எத்தனை மாநிலங்களில் பாஜக ஆட்சி.. இதை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.

Recommended Video

    பீகாரைத் தொடர்ந்து புதுச்சேரி: BJPக்கு அடுத்த செக்? Politics Today With Jailany

    அகண்ட பாரதம் என்ற கனவோடு 2014ல் ஆட்சிக்கு வந்தது பாஜக. இந்தியா முழுக்க காவி கொடியை நாட்ட வேண்டும் என்று ஆட்சிக்கு வந்த பாஜக வரிசையாக உத்தர பிரதேசம் தொடங்கி பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

    கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்து மீண்டும் ஆபரேஷன் கமலா மூலம் மீண்டும் ஆட்சிக்கு கூட வந்தது. அதோடு வடகிழக்கு மாநிலங்களில், மணிப்பூர் போன்ற தீவிர கம்யூனிஸ்ட் மாநிலங்களில் கூட பாஜக காவி கொடியை நாட்டிவிட்டது.

    புதுச்சேரியிலும் என்ஆர் காங்கிரஸ் உதவியுடன் பாஜக ஆட்சி நடக்கிறது. இப்போது தென்னிந்தியாவில் ஆழமாக கால் பதிக்க பாஜக முயன்று வருகிறது.

    பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்புபீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு

    மகாராஷ்டிரா ஆட்சி மாற்றம்

    மகாராஷ்டிரா ஆட்சி மாற்றம்

    மகாராஷ்டிராவில் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது. அங்கு உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் குழுக்கள் போர்க்கொடி தூக்கியது. இதனால் அங்கு உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் பாஜக அங்கு ஆட்சியை பிடித்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது.

    எண்ணிக்கை உயர்ந்தது

    எண்ணிக்கை உயர்ந்தது

    இதனால் நாடு முழுக்க பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. ஆனால் தற்போது பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இருந்த கூட்டணியை முறித்தது. நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாறாக காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் நிதிஷ் குமார் கூட்டணி வைத்து இன்று ஆட்சி அமைத்தார். இதனால் பாஜக இந்தியாவில் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18 ஆக மீண்டும் மாறியது.

     மேப் எப்படி உள்ளது

    மேப் எப்படி உள்ளது

    இந்த மேப்பில் பாஜக ஆளும் 18 மாநிலங்கள் காட்டப்பட்டு உள்ளன. அதேபோல் காங்கிரஸ் கூட்டணி ஆளும் 6 மாநிலங்கள் காட்டப்பட்டு உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்கள் காவி நிறத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நீல நிறத்தில் காட்டப்பட்டு உள்ளது. மற்ற 7 மாநிலங்களில் வேறு மாநில கட்சிகள் ஆளுகின்றன. இவை சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டு உள்ளது.

    மாநில ஆட்சிகளின் லிஸ்ட்

    மாநில ஆட்சிகளின் லிஸ்ட்

    1. ஆந்திரப் பிரதேசம் - ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்
    2 .அருணாச்சல பிரதேசம் - பாஜக கூட்டணி (BJP + NPP )
    3. அசாம் - பாஜக கூட்டணி (BJP + AGP + UPPL + BPF)
    4. பீகார் - ஐக்கிய ஜனதா தள மகாபந்தன் (JD(U) + RJD + INC + CPI(ML)L + CPI(M) + CPI)
    5. சத்தீஸ்கர் - காங்கிரஸ்
    6 டெல்லி - ஆம் ஆத்மி
    7 கோவா - பாஜக + எம்ஜிபி
    8 குஜராத் - பா.ஜ.க
    9 ஹரியானா - பாஜக கூட்டணி (BJP + JJP + HLP)
    10 ஹிமாச்சல பிரதேசம்- பா.ஜ.க
    11 ஜம்மு மற்றும் காஷ்மீர் - ஜனாதிபதி ஆட்சி
    12 ஜார்கண்ட் - காங்கிரஸ் கூட்டணி (JMM + INC + RJD +NCP+CPI(M)L)
    13 கர்நாடகா - பா.ஜ.க
    14 கேரளா - சிபிஎம் - சிபிஎம் எல்டிஎப் கூட்டணி
    15 மத்திய பிரதேசம் - பா.ஜ.க
    16 மகாராஷ்டிரா - பாஜக கூட்டணி (BJP + SS(NDA) + BVA + PJP + RSP + JSS + MNS + PWPI)
    17 மணிப்பூர் - பாஜக கூட்டணி (BJP + NPP +NPF+KPA)
    18 மேகாலயா - பாஜக கூட்டணி (NPP + UDP + INC + PDF + BJP + HSPDP)
    19 மிசோரம் - மிசோரம் தேசிய முன்னணி
    20 நாகாலாந்து - பாஜக கூட்டணி (NDPP + NPF + BJP)
    21 ஓடிசா- பிஜு ஜனதா தளம்
    22 புதுச்சேரி- பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி
    23 பஞ்சாப் - ஆம் ஆத்மி
    24 ராஜஸ்தான் - காங்கிரஸ்
    25 சிக்கிம் - எஸ்கேஎம் + பாஜக
    26 தமிழ்நாடு - திமுக - காங்கிரஸ் கூட்டணி (DMK + INC +VCK+CPI(M)+CPI)
    27 தெலுங்கானா- தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
    28 திரிபுரா - பாஜக கூட்டணி (BJP + IPFT)
    29 உத்தரப்பிரதேசம் - பாஜக ஆட்சி (பாஜக + ஏடி(எஸ்) + நிஷாத் + எஸ்பிஎஸ்பி)
    30 உத்தரகாண்ட் - பா.ஜ.க
    31 மேற்கு வங்காளம் - திரிணாமுல் காங்கிரஸ் (AITC + BGPM)

    English summary
    Look at this India statewise ruling parties map: BJP footprints in many places. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X