சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மல்லையாவிடம் கூட காட்டாத அதிரடி.. அதிர வைத்த சிபிஐ.. வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்!

தேடப்படும் நபராக சிதம்பரம் பெயர் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    சுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது

    சென்னை: நாட்டை விட்டே தப்பிச்சு ஓடும் அளவுக்கு ப.சிதம்பரம் முயல்வாரா? தேடப்படும் நபராக அறிவிக்கும் அளவுக்கு இவ்வளவு கெடுபிடிகள் எதற்கு? என்ற சந்தேகத்திற்கு மத்தியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் ப.சிதம்பரம்.

    ப.சிதம்பரம்.. எப்போதாவது உச்சரிக்கும் பெயர் இல்லை இது.. யாருமே அறிந்திராத புதுமுகமும் இல்லை இவர்.. அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்... தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர்.. தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்.. இரண்டு முறை மத்திய இணை அமைச்சர்.. இரண்டு முறை மத்திய நிதி அமைச்சர்.. சிவகங்கை தொகுதியின் எம்பி உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து எம்பிஏ படித்தவர்... வக்கீலும் கூட..

    இதுவரை அதிகமான பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்றவர்.. அதாவது மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் சிதம்பரம்தான்.. ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பர்.. இன்னமும் சோனியா குடும்பத்துடன் இவரது பாசமான உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது!

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்திய அரசியலில் இவ்வளவு நெருக்கம் உள்ள ஒரு நபரை அவ்வளவு சீக்கிரம் "வான்டட்" லிஸ்ட்டில் சேர்த்துவிட்டது ஆச்சரியத்தை மட்டுமல்ல.. அதிர்ச்சியையும் சேர்த்து தருகிறது. ப.சிதம்பரம் செய்தது சரியா, தவறா என்பதற்குள் நாம் போக தேவையில்லை.. அதை முடிவு செய்ய வேண்டியது கோர்ட்! கோடி கோடியாக கொள்ளை அடித்த விஜய் மல்லையாவே நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையில், அப்படி ஒரு குற்றத்தை சிதம்பரம் செய்யவில்லை.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    வழக்கு விசாரணையின் தீவிரம் அவருக்கு தெரியும்.. இது தன் குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் அகில இந்திய காங்கிரசுக்கே கறையை தந்துவிடும் என்பதும் அவருக்கு புரியம்.. உச்சக்கட்ட விசாரணையில், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ப.சிதம்பரம் எந்த வெளிநாட்டுக்கும் தப்பி சென்றிருக்க வாய்ப்பே இருக்காது. அப்படி இருக்கும்போது, ஏர்போர்ட் உள்ளிட்ட இடங்களில் தேடப்படும் நபராக சிதம்பரத்தை அறிவித்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

    அவசரமோ?

    அவசரமோ?

    அப்படியே வெளிநாட்டுக்கு ஓடிப்போகும் அளவுக்கு எண்ணம் உடையவர் அவர் கிடையாது. தன்னுடை வீட்டில் சிதம்பரம் இல்லை என்றதும், 24 மணி நேரத்திற்குள்ளேயே தேடப்படும் நபராக அவரை லுக் அவுட் நோட்டிஸ் அறிவித்திருப்பது பாஜகவின் அவசரத்தன்மையையும் காட்டுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. சிதம்பரத்தை பொறுத்தவரை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததை மறுக்க முடியாதுதான்.

    அவமானம்

    அவமானம்

    அதேசமயம், சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் வழங்கினால் மட்டுமே இந்த சிக்கலில் இருந்து சிதம்பரம் தப்பிக்கும் சூழல் இருந்தது. இந்த முன் ஜாமீன் வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுத்ததால்தான் இந்த தலைமறைவு விவகாரமும் எழுந்தது. ஒருவேளை வழக்கை விசாரித்திருந்தாலோ, அல்லது ஜாமீன் கிடைத்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ, இப்படி ஒரு அவமானம் சிதம்பரத்துக்கு கிடைத்திருக்காது என்றே தெரிகிறது.

    கூண்டுக்கிளி

    கூண்டுக்கிளி

    ஆக மொத்தம், சிதம்பரம் வீட்டில் இல்லாததும், செல்போன் ஆப் பண்ணி இருப்பதும், தலைமறைவாக இரு்நததும் எல்லாமே முன்ஜாமீன் வாங்குவதற்காகத்தான் என்பது தெளிவானது. இந்த நிலையில்தான் இன்று இரவு ப.சிதம்பரம் வரலாறு காணாத வகையில் சேஸ் செய்து கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மல்லையாவிடமோ மற்றவர்களிடமோ காட்டாத வரலாறு காணாத இறுக்கத்தை சிபிஐ ப.சிதம்பரத்திடம் காட்டியதுதான் பல கேள்விகளை எழுப்பி விட்டது.

    English summary
    P Chidambaram INX case issue: Lookout notice against P Chidambaram by Central government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X