சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இழப்பு யாருக்கு? காலம் பதில் சொல்லும்?... தமிழிசை பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் வெற்றியை பறிக்கொடுத்த தமிழக பாஜக தலைவரிடம், ட்வீட்டரில் விமர்சனத்தை முன்வைத்த நபருக்கு, தமிழிசை மருத்துவரீதியாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள்; பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள் என்றார்.

Loss to whom? Time will answer? Says State BJP president Tamilisai

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன், பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!

தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும், தமிழக மக்களிடம் பாஜக வாக்குகளை ஏன் பெறவில்லை? என நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

இந்தநிலையில், தமிழிசையின் தோல்வி குறித்து ட்வீட்டரில் கருத்து பதிவிட்ட சாலமன் என்பவர், தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை. தூத்துக்குடி உப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்துள்ள, தமிழிசை சௌந்தரராஜன், உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும் உயர்ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு இதயநோய் வரும் உங்கள் குடும்ப டாக்டரை கேட்டால் உண்மை புரியும்? இழப்பு யாருக்கு? காலம் பதில் சொல்லும்? என குறிப்பிட்டுள்ளார்.

வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு! வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

English summary
State BJP president Tamilisai Said that Loss to whom? Time will answer?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X