சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்!

சென்னைக்கு அருகே தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

    சென்னை: சென்னைக்கு அருகே தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தற்போது தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன?கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன?

     இந்திய வானிலை மையம்

    இந்திய வானிலை மையம்

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை எப்படி வலுப்பெற்று வருகிறது. காற்றின் சுழற்சி எப்படி இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.

    ஆந்திரா

    ஆந்திரா

    சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு அருகேதான் இந்திய பெருங்கடலில்தான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் காற்று அதிகமாக வீசும். ஆனால் காற்றின் திசையை பொறுத்தே சென்னையில் மழை பெய்யுமா, பெய்யாதா என்பதை கணிக்க முடியும்.

     கடல் சீற்றம்

    கடல் சீற்றம்

    சென்னையில் இந்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். நாள் முழுக்க வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் கண்டிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளனர்.

    புகைப்படம்

    புகைப்படம்

    சென்னையை போலவே கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காற்று வீசும் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளது. குமரியில் நாள் முழுக்க கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    English summary
    Low-level air circulation formed near Chennai which may cause heavy rain in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X