சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Low pressure area over East Central Bay of Bengal

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இலேசான மழையும்,

அடுத்த 48 மணிநேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமாக மழை பெய்யும். நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக் கூடும்.

15 நிமிடத்தில் கூட இறக்கிறார்கள்.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. தமிழகத்தில் என்ன நடக்கிறது.. பகீர்!15 நிமிடத்தில் கூட இறக்கிறார்கள்.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. தமிழகத்தில் என்ன நடக்கிறது.. பகீர்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
A low pressure area has developed over the East Central Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X