சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை எவ்ளோ தெரியுமா

வீட்டு சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 4 ரூபாய் அதிகரித்து 610 ரூபாய் 10 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: எல்பிஜி சிலிண்டர் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 4 ரூபாய் அதிகரித்து 610 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து வீட்டு சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வே காரணம் என்று நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகின்றன.

LPG cylinder price hiked today

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் 14.2 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரை வீடுகளில் பயன்பாட்டிற்காக விற்பனை செய்கின்றன. அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு மானியங்களை அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தி உதவுகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இணையதளத்தில் வெளியிட்டுள்ள விலையின்படி, டெல்லியில் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.594 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 5 பேர் பலி நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 5 பேர் பலி

மும்பையில், ஒரு இண்டேன் 14.2 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.03.50 அதிகரித்து ரூ.594 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் 4 ரூபாய் அதிகரித்து 620.50 பைசாவாக உயர்ந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.4 அதிகரித்து 610 ரூபாய் 10 பைசாவாக உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மானியம் இல்லா எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ச்சியாக 3 முறை விலை குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மானியம் இல்லா சிலிண்டரின் விலை இரண்டாவது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், டெல்லியில் 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ. 11.50 உயர்த்தப்பட்டது. இந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகள் தினசரியும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எல்பிஜி சிலிண்டருக்கு மாதந்தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது.

English summary
Indian Oil's non-subsidised 14.2 kg cylinder, Indane, will cost Rs 594 in both Delhi and Mumbai from today. Chennai rate 610.10
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X