சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி

எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 ரூபாய் அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் ஒரே மாதத்தில் 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 50 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

    மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை கிடுகிடு… ஒரே மாதம்.. 2 முறை உயர்வால் மக்கள் ஷாக்!

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி 16ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவதால் அதன் விலை தினசரி கூடுவதாகவே உள்ளது. இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு சிலிணடர் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்வை சந்திக்கிறது.

    LPG gas cylinder price hike Rs. 50

    வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. இன்று மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.785 ஆக உள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. 2900 பணியிடங்கள்.. 59,900 வரை சம்பளம்!தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. 2900 பணியிடங்கள்.. 59,900 வரை சம்பளம்!

    தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.56.50 உயர்ந்து ரூ.1,410.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிஅதன் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தி அமைத்து வருகின்றன.

    English summary
    The price of a cooking gas cylinder has gone up by Rs 50 across the country. The price of a 25-rupee cooking gas cylinder has gone up by Rs 50 on the 4th. In Chennai, a cylinder currently sells for Rs 785. Housewives are shocked that the price of a cylinder has gone up by Rs 75 in a single month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X