சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    வரலாற்றில் இல்லாத அளவு காஸ் சிலிண்டர் விலை உயர்வு- வீடியோ

    டெல்லி: மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1000 ரூபாயை தாண்டியுள்ளது.

    சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் குறைந்து வருகிறது. ஆனால், காஸ் சிலிண்டர் விலை விண்ணை தொட்டுள்ளது.

    LPG price crosses ₹1,000 for the first time in India

    14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற சிலிண்டர் பெங்களூரில் ரூ.941ஆக விற்பனை செய்யப்படும்போதிலும், அதே கர்நாடக மாநிலத்தின், வடபகுதியில் உள்ள பீதரில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,015 என்ற விலையில் விற்கப்படுகிறது.

    ஏப்ரல் மாதம், பீதர் மாவட்டத்தில் மானியமற்ற சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.721 என்ற வகையில் இருந்தது. பீகார் மாநிலத்திலும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ள சிலிண்டர் விலை ரூ.1041.5 என்ற விலையில் விற்பனையாகிறது.

    பெட்ரோல்-டீசலை போல தினசரி விலை நிர்ணயிக்கப்படாமல், மாதம் ஒருமுறை சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படும். அப்படியிருந்தாலும், விலை குறைக்கப்படவில்லை. மத்திய அரசும் விலைவாசி உயர்வு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

    English summary
    The cost of non-subsidised domestic LPG is lingering around the ₹1,000 mark in most regions of Karnataka, and in Bidar a cylinder is being sold at ₹1,015.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X