சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல்லதரசிகளே ஹேப்பி நியூஸ்.. மானியமில்லா கியாஸ் சிலிண்டர் விலை சரசரவென சரிவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று முதல் மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாய் குறைந்து 826க்கு விற்பனை ஆகிறது. இதனால் இல்லதரிசகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று சந்தை நிலவரத்தை பொறுத்து மாறும். 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா சிலிண்டர் விலை கடந்த வருடம் டிசம்பரில், சென்னையில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.665 ஆகவும், டெல்லியில் ரூ.695 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.725.5 ஆகவும் விற்கப்பட்டது.

LPG Price Cut From Today : LPG consumers in chennai have to pay Rs 826 per cylinder

ஆனால் அதன்பின்னர் ஜனவரி 1ம் தேதி மீண்டும் விலை மீண்டும் அதிகரித்தது. இதன்படி, சென்னையில் ரூ.734 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும், டெல்லியில் ரூ.714 ஆகவும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.747 ஆகவும் விற்கப்பட்டது.

அதன்பிறகு டெல்லி தேர்தல் காரணமாக பிப்ரவரி 1ம் தேதி விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் தேர்தல் முடிவு வெளியான மறுநாளே அதாவது 12ந்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. இதன்படி, மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை தேசிய தலைநகரான டெல்லியில் ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50 க்குவிற்பனை செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ.149 உயர்ந்து ரூ.896 ஆக விற்கப்பட்டது., மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரூ.145 உயர்ந்து ரூ.829.50 ஆகவும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ரூ.147 உயர்ந்து ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்ப்பட்டது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். விலை குறையுமா என்று கேட்ட போது. சர்வதேச எண்ணெய் விலை உயர்வு காரணமாக விலை உயர்ந்ததாகவும் அடுத்த மாதம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அப்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறினார்.

ஆந்திராவில் அதிகாலை 6 மணிக்கே வீடு தேடி வந்த பென்சன்.. முதியோர்-ஊனமுற்றோர் இன்ப அதிர்ச்சிஆந்திராவில் அதிகாலை 6 மணிக்கே வீடு தேடி வந்த பென்சன்.. முதியோர்-ஊனமுற்றோர் இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லா சிலிண்டர் விலை மார்ச் 1 முதல் 50 ரூபாய்க்கும் அதிகமாக குறைவதாக இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் அறிவித்தது அதன்படி, சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 55 ரூபாய் குறைந்து 826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.805.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.839 ஆகவும், மும்பையில் ரூ.776.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
From March 1, 2020, Indian Oil LPG consumers in chennai have to pay Rs 826 per cylinder (14.2 kilograms)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X