சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானில் அரங்கேறிய அதிசயம்.. இந்தியா உட்பட பல நாடுகளிலும் செம ஒளியோடு மிளிர்ந்த சந்திர கிரகணம்

Google Oneindia Tamil News

சென்னை: 2020வது ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளைக்கு இடைப்பட்ட நள்ளிரவில் நிகழ்ந்தது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்கியது.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவின் மீது படாது. ஏனெனில், பூமி அதை மறைத்துக்கொள்ளும். இதுதான் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உள்ளன - முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் ( penumbral lunar eclipse).

பங்குனி மாத சந்திர தரிசனம் இன்று மறக்காம பாருங்க - நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும் பங்குனி மாத சந்திர தரிசனம் இன்று மறக்காம பாருங்க - நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும்

அது என்ன பெனும்பிரல் சந்திர கிரகணம்

அது என்ன பெனும்பிரல் சந்திர கிரகணம்

பூமியின் புறநிழல் வழியாக சந்திரன் நகரும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி இரவு துவங்கியது பெனும்பிரல் சந்திர கிரகணம் 'ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம்' என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராபெரி சந்திர கிரகணத்தின்' போது, ​​சந்திரனின் 57 சதவீதம் பூமியின் புற நிழலுக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சந்திர கிரகணம் இந்தியாவில் எப்போது தெரியும்

சந்திர கிரகணம் இந்தியாவில் எப்போது தெரியும்

ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல் சந்திர கிரகணம் துவங்கியது. அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரிந்தது. பூமியின் புற நிழல் சந்திரனை முழுவதுமாக மறைக்கும் நேரம் ஜூன் 6 அன்று அதிகாலை 12:54 மணியாகும். அப்போது உச்சபட்ச சந்திர கிரகணம் நிகந்தது.

சந்திர கிரகணம் 2020 எப்போது நடந்தது

சந்திர கிரகணம் 2020 எப்போது நடந்தது

வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக பார்க்க முடியும் என்று கூறியிருந்தனர் வானியல் ஆய்வாளர்கள். பூமியின் புறநிழல் மட்டுமே சந்திரனின் மீது விழக்கூடிய இதேபோன்ற சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்து. இந்த நிலையில், இரண்டாவது முறையாக, இன்று பெனும்பிரல் சந்திர கிரகணம் நடைபெற்றது. இருப்பினும் இது ஸ்டாபெரி கலரில் இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் ரொம்பவே ஒளி பொருந்தியதாக இருந்தது.

சந்திர கிரகணம் எத்தனை முறை நடக்கும்

சந்திர கிரகணம் எத்தனை முறை நடக்கும்

2020 ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு சந்திர கிரகணங்கள் நிகழ்கிறது. இவற்றில் ஒன்று ஏற்கனவே ஜனவரி மாதம் நடந்துள்ளது, 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நள்ளிரவில் நடந்தது. இதற்கு பிறகு ஜூலை மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் தலா ஒரு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.

English summary
The lunar eclipse of the year 2020 is a penumbral one, is scheduled to happen tonight starting at 11:15 pm. The lunar eclipse will start on June 5 but stretch out to June 6, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X