• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சிறிது காலம் ஒடுங்குவோம்; சிறகு கொள்வோம்.- ஊரடங்கை பின்பற்ற கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

|

சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 2 வார ஊரடங்கை முழுமையாக பின்பற்றுவோம் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது பரவல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையும் தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Lyricist Vairamuthu appeals to Follow Full Lockdown in TamilNadu

இதனால் முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. நீடிக்கும் ஆலோசனை.. இந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. நீடிக்கும் ஆலோசனை.. இந்த "நான்கில்" ஒன்றுக்கு வாய்ப்பு

இந்த ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு:

கூட்டுப்புழு
தன்னொடுக்கம் கொள்வது
வானளக்கும் சிறகு வாங்கி
வண்ணத்துப்பூச்சியாகத்தான்;
ஊரடங்கும் அப்படித்தான்.

சிறிது காலம் ஒடுங்குவோம்;
சிறகு கொள்வோம்.
#Lockdowntamilnadu

இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

English summary
Lyricist Vairamuthu Has appealed that Public Should Follow the Full Lockdown in TamilNadu for 2 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X