சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்?

திமுகவின் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரியை பாஜகவின் தேசிய தலைவர் எச். ராஜா நேரில் சந்தித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரியை பாஜகவின் தேசிய தலைவர் எச். ராஜா நேரில் சந்தித்தார்.

திமுகவில் ஒரு காலத்தில் மதுரையின் முகமாக திகழ்ந்தவர் மு. க அழகிரி. அதேபோல் திமுக சார்பாக எம்பியாகவும், மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்து இருந்தார்.

அதன்பின் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மூலமாகவே இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தற்போது வரை மு.க அழகிரி திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா?இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா?

கொஞ்சம் நண்பர்

கொஞ்சம் நண்பர்

இடையில் பலமுறை மு.க அழகிரி திமுகவில் இணைய முயற்சி செய்து தோல்வி அடைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் போல இல்லாமல் மு.க அழகிரி பாஜக தலைவர்கள் சிலருக்கு நெருக்கமாக இருந்து வருகிறார். பாஜக தேசிய தலைவர் எச். ராஜாவுடன் மு.க அழகிரி நட்பு பாராட்டி வருகிறார். நடிகர் ரஜினிகாந்துடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

என்ன சந்திப்பு

என்ன சந்திப்பு

இந்த நிலையில்தான் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுடன் மு.க அழகிரி இன்று சந்திப்பு நடத்தினார். எச். ராஜா வீட்டில் இருவரும் சந்திப்பு நடத்தினார்கள். இதில் எச். ராஜா தனது இளைய மகளின் திருமணத்திற்கு அழகிரியை அழைத்தார்.

ஆலோசனை

ஆலோசனை

இவர்கள் இருவரும் சுமார் 15-20 நிமிடம் ஆலோசனை செய்தனர். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. திமுகவில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், பாஜகவின் வருங்கால தலைவர் யார் என்பது குறித்தும் இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

என்னதான் சொன்னார்

என்னதான் சொன்னார்

இந்த ஆலோசனை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் மு. க அழகிரி, இது நட்பு ரீதியான சந்திப்பு. நான் திமுகவில் இப்போது, அந்த கட்சி குறித்து யாரும் என்னிடம் கேட்காதீர்கள். எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை, என்று குறிப்பிட்டார்.

English summary
M K Alagiri meets BJP National Secretary H Raja in the later's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X