சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...!

Google Oneindia Tamil News

Recommended Video

    மு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி..!-வீடியோ

    சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணியின் செயல்பாடுகள் தொடர்ந்து அவப்பெயர் பெற்றுத்தரும் வகையில் உள்ளதால், அவரை ஒதுக்கிவைத்துள்ளது குடும்பம்.

    பணமோசடி வழக்கில் தொடர்ந்து சிக்கி வரும் வி.எம்.ஜோதிமணியால் திமுகவின் பெயரும் சேர்ந்து கெடுவதாக எண்ணிய செல்வி-முரசொலி செல்வம் தம்பதி, மருமகனுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    ஜோதிமணியின் நடவடிக்கைகள் செல்விக்கும், அவரது கணவரான முரசொலி செல்வத்திற்கும் குடும்பத்தில் தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளது.

    பாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன?பாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன?

    பணமோசடி

    பணமோசடி

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி-முரசொலி செல்வம் தம்பதியின் மருமகன் ஜோதிமணி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.80 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாக சவுகார்பேட்டையை சேர்ந்த தினேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அவப்பெயர்

    அவப்பெயர்

    மு.க.செல்வியின் மருமகன் வி.எம்.ஜோதிமணி மீது இந்த ஒரு வழக்கு மட்டும் இல்லை, கடந்த 2011-ம் தொடங்கி இதுவரை அவர் பலபேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் புகார் உள்ளது. அது தொடர்பாகவும் பாண்டிபஜார், உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    நிம்மதி இழப்பு

    நிம்மதி இழப்பு

    மருமகன் ஜோதிமணியின் நடவடிக்கைகளால் நிம்மதி இழந்து தவிக்கின்றனர் செல்வி-முரசொலி செல்வம் தம்பதி. மேலும், ஜோதிமணியின் செயல்பாடுகளால் செல்வியின் பெயரும் தாளம்பூர் நில விற்பனை மோசடி வழக்கில் இணைக்கப்பட்டு அவரும் இன்றும் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்து வருகிறார்.

    வெறுப்பு

    வெறுப்பு

    மருமகன் ஜோதிமணியிடம் செல்வியும் அவரது கணவரும் முரசொலி நாளிதழ் பதிப்பாளருமான முரசொலி செல்வம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. காரணம் அவரது கூட்டாளிகள் வட்டம் அப்படி இருப்பதால் இவர்களால் திருத்த முடியவில்லை. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக ஜோதிமணியை வெறுத்து ஒதுக்கிவிட்டனர்.

    தொடர்பில்லை

    தொடர்பில்லை

    இந்நிலையில், தினசரி நாளிதழ் ஒன்றில் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ள செல்வி-முரசொலி செல்வம் தம்பதி, ''எங்கள் மருமகன் வி.எம்.ஜோதிமணி அவர்களின் செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை . அவற்றிற்கு நாங்கள் பொறுப்புமல்ல.'' என்று கூறியுள்ளார்கள். அவரின் எந்த செயலுக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    வி.எம்.ஜோதிமணி மீது கடந்த 2011-ல் தியாகராய நகரை சேர்ந்த சோமசேகரிடம் ரூ.1 கோடியே 40 லட்சத்தை ஏமாற்றி வாங்கியது, வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவரிடம் 3 கோடி ரூபாய் நிலத்தை விற்பதாக கூறி முன்பணம் பெற்றது, இப்போது தினேஷ் என்பவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்தது என பல பணமோசடி வழக்குகள் உள்ளன.

    கண்டுகொள்ளவில்லை

    கண்டுகொள்ளவில்லை

    இந்த விவகாரத்தில் சட்டப்படி, நியாயப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும், இதில் தலையிடுவதில்லை என்பதில் கருணாநிதி மகள் செல்வியும் அவரது கணவர் முரசொலி செல்வமும் மிகவும் உறுதியாக உள்ளனர்.

    English summary
    m.k.selvi-murasoli selvam couples announces there has no contact in son in law jothimani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X