சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் திருப்பங்களால் அரசியல் கட்சிகள் எல்லாம் பொதுத்தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. பின்னணி இதுதான்!

    சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் திருப்பங்களால் அரசியல் கட்சிகள் எல்லாம் பொதுத்தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் பரபரப்பும், தமிழக சட்டசபை பரபரப்பும் இன்னும் அடங்கவில்லை. மே 23ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதோடு தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளும் வெளியாகிறது.

    இந்த சட்டசபை தேர்தல் முடிவுகளால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்காக தற்போது அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

    காங்கிரஸ் கடுமையான விலை கொடுக்க போகிறது.. பொங்கி எழும் மாயாவதி.. இதுதான் காரணம்!காங்கிரஸ் கடுமையான விலை கொடுக்க போகிறது.. பொங்கி எழும் மாயாவதி.. இதுதான் காரணம்!

    அதிமுக நிலை என்ன

    அதிமுக நிலை என்ன

    தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மொத்தம் 22 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் குறைந்தது 8 இடங்களில் வென்றால்தான் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும். இல்லையென்றால், ஆட்சி கவிழ கூட வாய்ப்பு உள்ளது. இதனால்தான் அதிமுக இப்போதே மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    திமுக திட்டம் என்ன

    திமுக திட்டம் என்ன

    இதற்காகத்தான் திமுக தற்போது சபாநாயகரை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திமுகவின் திட்டத்தின் படி, இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதன்பின் 6 மாதங்கள் வரை ஆட்சி அமைத்துவிட்டு, பின் சூழ்நிலை சரியான பின் சட்டசபை தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. அப்படி செய்தால் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்று திமுக நினைக்கிறது.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரனின் திட்டமோ முழுக்க முழுக்க வேறு மாதிரி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சட்டசபை இடைத்தேர்தலில் 22 இடங்களில் 6 இடங்களை குறைந்தபட்சம் கைப்பற்ற தினகரன் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக ஆட்சியை கைப்பற்றி, முதல்வரை மாற்ற வைக்கலாம், கட்சியை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அவர் நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இதனால்தான் ரஜினிகாந்த் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள். அதன்படி, சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராக இருங்கள் என்று ரஜினி கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்பதால் இப்படி கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.

    6 மாதம்

    6 மாதம்

    தமிழகத்தில் 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக இவர்களுக்கு செய்தி போய் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே திட்டங்கள் போடப்பட்டு வருகிறது. திமுக, அமமுக, ரஜினியின் திட்டங்கள் சரியாக நடக்குமா இல்லை அதிமுகவின் ஆட்சியே தொடருமா என்பதற்கான பதில் மே 23ம் தேதி தெரிந்துவிடும்!

    English summary
    DMK Chief M K Stalin and Rajini Kanth already started their plan for TN Assembly Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X