சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்.. ஆட்சியை கவிழ்க்க புதிய பிளான்!

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின்பும் கூட அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும், அமமுகவும் முடிவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின்பும் கூட அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும், அமமுகவும் முடிவெடுத்து இருக்கிறது.

    தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் அதிமுகவை தோல்வி அடைய செய்து ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டது.

    ஆனால் அதிமுக இந்த தேர்தலில் 9 இடங்களை வென்றது. மாறாக திமுக 13 இடங்களை வென்று புதிய பலம் பெற்றது.

    எத்தனை பலம்

    எத்தனை பலம்

    தமிழக சட்டசபையில் பெரும்பான்மை 117 இடங்கள் தேவை. இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றதன் மூலம் 123 பேர் பலத்தை அதிமுக கொண்டு இருக்கிறது. அதே சமயம் நாங்குநேரி எம்எல்ஏ வசந்த குமார் பதவி விலகலை திமுக காங்கிரஸ் கூட்டணியின் பலம் 109 ஆக குறைந்துள்ளது.

    எதிர்ப்பு எவ்வளவு

    எதிர்ப்பு எவ்வளவு

    அதே சமயம் அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் இருக்கிறார்கள். அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆவர். அதே போல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

    குறைவும்

    குறைவும்

    இதனால் அதிமுகவின் பலம் 118 ஆக சபாநாயகரையும் சேர்த்து குறையும். அதிமுகவின் அரசு இதனால் பெரும்பான்மை வாக்கெடுப்பில் எளிதாக வெற்றிபெறும். ஆனால், இங்குதான் திமுக தனது திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் உள்ள 6 எம்எல்ஏக்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது.

    யார் யார்

    யார் யார்

    தமிழக அமைச்சரவையில் வரும் ஜூன் 5ம் தேதி நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக 6 எம்எல்ஏக்கள் வரை தங்கள் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் அதிருப்தியில் திமுக பக்கம் செல்ல கூட வாய்ப்புள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின் இவர்களுடன் பேச திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் இவர்களை தங்கள் பக்கம் இழுத்து அதை வைத்து ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தினகரன் பிளான்

    தினகரன் பிளான்

    அதேபோல் டிடிவி தினகரன் இந்த வாக்கெடுப்பு நடக்கும் போது, தனது ஸ்லீப்பர் செல்களை களமிறக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். 4 பேர் வரை ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தன்னிடம் இருக்கும் கடைசி ஆயுதம் இதுதான், கண்டிப்பாக ஆட்சி கவிழ்க்கப்படும் என்று இவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தகுதி நீக்கம்

    தகுதி நீக்கம்

    தற்போது தமிழக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான வழக்கும் நடக்கிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இதனால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யாமல் ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திமுக, அமமுக தரப்பு நம்புகிறது.

    English summary
    DMK chief M K Stalin and TTV Dinakaran go for plan B to dissolve the AIADMK government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X