சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியின் அந்த பேச்சால் வந்த மாற்றமா? ஸ்டாலின் பிரச்சாரத்தில் புதிய திருப்பம்.. அதிரடி பிளான்!

திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்டு இருக்கும் சில மாற்றங்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்தின் ஒரு பேட்டி காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ரஜினி காரணமா?- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்டு இருக்கும் சில மாற்றங்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்தின் ஒரு பேட்டி காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. நாளை மறுநாள் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

    ஆனால் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றாலும் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அவர் பாராட்டி இருந்தார்.

    கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

    பிரச்சனை என்ன

    பிரச்சனை என்ன

    சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த ரஜினி, தண்ணீர் பிரச்சனைதான் தற்போது பெரிய பிரச்சனை. அதை தீர்க்கும் கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். அதை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துபவர்கள் என்று யாரை நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    அதன்பின் மீண்டும் பாஜக கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றி கூறியிருந்ததை வரவேற்கிறேன். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும், என்று ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

    மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்!மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்!

    ஸ்டாலின் என்ன

    ஸ்டாலின் என்ன

    இந்த நிலையில் ரஜினியின் இந்த தொடர் ஸ்டேட்மென்ட்களை அடுத்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரங்களில் நதி நீர் இணைப்பு குறித்து பேச தொடங்கி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் நதி நீர் இணைப்பு குறித்து பேசாமல் இருந்தவர் இன்று வலங்கைமான் பிரச்சாரத்தில் அதுகுறித்து பேசினார்.

    அட அப்படியா

    அட அப்படியா

    ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில், தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னிந்திய நதிகளை இணைப்பதன் மூலம் கூடுதல் நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். காவிரி பிரச்சனை மொத்தமாக தீர்க்கப்பட்டு, காவிரியில் கூடுதல் நீர் பெற வழிவகை செய்யப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி

    கேள்வி

    இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் தற்போது இதை வைத்து ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார்கள். அதன்படி ரஜினி நதி நீர் இணைப்பு குறித்து பேசும் வரை ஸ்டாலின் அதை பற்றி பேசவில்லை. இப்போது ரஜினி நதி நீர் இணைப்பை பற்றி பேசியதும் ஸ்டாலினும் இதை குறித்து பேச தொடங்கிவிட்டார், என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

     உண்மை என்ன

    உண்மை என்ன

    அதேசமயம் ஸ்டாலின் வேண்டும் என்றே தெரிந்துதான் இப்படி பேசுகிறார் என்று திமுகவினர் தெரிவித்து வருகிறார்கள். திமுக பல ஆண்டுகளாக நதி நீர் இணைப்பு குறித்து பேசி வருகிறது. பாஜக இப்போதுதான் அதை பேசுகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவே ஸ்டாலின் இப்படி பேசுகிறார் என்றும் திமுகவினர் குறிப்பிடுகிறார்கள்.

    English summary
    DMMK chief M K Stalin did some changes in his campaign speech after Rajini Kanth's press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X