சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா.. ராஜலட்சுமி கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாதி வெறிக்கு பலியான சிறுமி ராஜலட்சுமி... என்ன நடந்தது... வீடியோ

    சென்னை: சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜலட்சுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, சாதி பெயரை சொல்லி, கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்தார் தினேஷ்குமார் என்பவர்.

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    சிறுமியின் இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிறுமி படுகொலையை கண்டித்தும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    [என்ன செய்கின்றன அரசியல் கட்சிகள்.. சாதி வெறிக்கு பலியான ராஜலட்சுமியை கண்டுகொள்ளாதது ஏன்? ]

    ஸ்டாலின் கண்டனம்

    ஸ்டாலின் கண்டனம்

    இந்நிலையில் படுகொலைக்கு காரணமான கொலைக்குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    இதுதான் லட்சணமா?

    இதுதான் லட்சணமா?

    "சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்"

    இரும்புக்கரம்

    இவ்வாறு ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

    English summary
    M.K. Stalin gives his supports to Salem Rajalakshmi through Twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X