சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்கு வங்கியை உயர்த்த பிளான்.. திமுக பக்கம் சாய்கிறாரா விஜய்.. ஜெயக்குமார் சொல்வது உண்மையா?

நடிகர் விஜய் திமுக கட்சி பக்கம் சாய்வதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜய் மீதான அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது

    சென்னை: நடிகர் விஜய் திமுக கட்சி பக்கம் சாய்வதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுகவை சேர்ந்த மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்டார்கள்.

    இந்த சந்திப்பு பெரிய வைரலானது. அப்போது, நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு குறித்து தற்போது அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். நடிகர் விஜய் திமுகவில் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும்.திமுக யாரை சேர்க்க நினைத்தாலும் சேர்க்கட்டும். அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்துள்ளது. இதனால் விஜய் மற்றும் ஸ்டாலின் இருவரும் சந்தித்துள்ளனர், என்றார்.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் ஜெயக்குமார் சொல்வது போல நடிகர் விஜய் திமுக பக்கம் சாய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலங்களில் விஜய் பேசும் சில அரசியலும், திமுக எடுக்கும் நிலைப்பாடுகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. முக்கியமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருவரும் ஒரே மாதிரி நிலைப்பாடுதான் எடுத்தனர்.

    இதற்கு முன்பு

    இதற்கு முன்பு

    அதேபோல் நீட் தேர்வு பிரச்சனையில் அனிதா குறித்து பேசியதும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களுக்கு ஆதரவாக நின்றதிலும் இரண்டு பேருமே ஒரே பக்கம் நிலைப்பாடு எடுத்தனர். அதுமட்டுமில்லாமல் சர்க்கார் மற்றும் மெர்சல் படத்திற்கு அதிமுக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது.

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    இந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடந்த சமயத்தில் விஜய்க்கு திமுக ஆதரவாக குரல் கொடுத்தது. அதிமுகவின் போராட்டத்திற்கு எதிராக திமுக தொண்டர்கள் பலர் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஸ்டாலின் மற்றும் விஜய் இடையே சந்திப்பு நடந்து இருக்கிறது. இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் அதிமுக மற்றும் பாஜகவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியில் ரஜினி இணைவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள். அதனால் இன்னொரு முக்கிய நடிகரான விஜயை திமுக பயன்படுத்த நினைக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் திமுகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் அதிகரிக்கும்.

    ஆனால் சிக்கல்

    ஆனால் சிக்கல்

    ஆனால் ஏற்கனவே சுறா படத்தின் போது திமுக உடன் விஜய்க்கு லேசான உரசல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது. அதேபோல் 2ஜி குறித்து கத்தி படத்தில் வந்த வசனமும் திமுகவை கொஞ்சம் சீண்டியது. ஆனால் அதை எல்லாம் தற்போது திமுக மறந்துவிட்டு, விஜய் உடன் சுமூகமாக சென்றுள்ளதாகவே கூறுகிறார்கள்.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    தமிழக சட்டசபை தேர்தலில் அடுத்தமுறை முக்கிய நடிகர்கள் அதிகம் கவனம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் ஸ்டாலின் சந்திப்பும், அது தொடர்பான ஜெயக்குமார் பேட்டியும் இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    English summary
    DMK chief M K Stalin's meeting with Vijay raises too many questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X