சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தவறான சிக்னல் கொடுக்க கூடாது.. பிரச்சனையே வேண்டாம்.. கேசிஆர் சந்திப்பிற்கு நோ சொல்லும் ஸ்டாலின்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினை சந்திக்கும் சந்திரசேகர ராவ்.. அமித்ஷாவின் ராஜதந்திரம்- வீடியோ

    சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    லோக்சபா தேர்தல் நடந்து வரும் நேரத்தில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரசியலில் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக மூன்றாம் அணி உருவாவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் மே 23ம் தேதி வெளியாகும். இதில் வரும் முடிவுகளை பொறுத்து தேசிய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல அதிரடி திட்டங்களுடன் களமிறங்கி இருக்கிறார்.

    சத்தம் போடாமல் கப்சிப்னு இருக்கும் கூட்டணி கட்சிகள்.. கமுக்கமா இருக்கும் திமுக, அதிமுக.. என்ன காரணம் சத்தம் போடாமல் கப்சிப்னு இருக்கும் கூட்டணி கட்சிகள்.. கமுக்கமா இருக்கும் திமுக, அதிமுக.. என்ன காரணம்

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு திட்டங்களை மனதில் வைத்து அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறது.

    பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்காத கட்சிகளை, தேர்தல் முடிவிற்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்க செய்வது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போதே நடத்துவது. இல்லையென்றால், பாஜக காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணியை உருவாக்குவது.

    பேசி வருகிறார்

    பேசி வருகிறார்

    இதற்காக அவர் தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் நேற்று காலை போனில் பேசினார். திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க உள்ளார்.

    கேன்சல் ஆனது

    கேன்சல் ஆனது

    மே 13ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் இந்த சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். சந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது. மே 19ம் தேதி நடக்கும் 4 சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், சந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கு முக்கிய காரணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, மு.க ஸ்டாலின் தேசிய அரசியலில் தவறான சிக்னலை கொடுக்க கூடாது என்று இந்த சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறுகிறார்கள். அதன்படி,

    கேசிஆரை சந்தித்தால், மூன்றாம் அணி உருவாவது குறித்த பேச்சு எழும்.

    இந்த சந்திப்பால், பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக தயாராவதாக பிற கட்சிகள் நினைக்க கூடும்.

    காங்கிரஸ் - திமுக இடையே மனக்கசப்பு ஏற்படும்.

    இதனால் மறுப்பு

    இதனால் மறுப்பு

    இதனால் தற்போது ஸ்டாலின், இந்த சந்திப்பிற்கு நோ சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே கேசிஆர் மற்றும் சந்திரப்பாபு நாயுடு இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது கேசிஆர் ஸ்டாலின் இடையிலும் சிறிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது.

    English summary
    DMK chief M K Stalin says NO to the meeting with Telangana CM Chandra Sekhara Rao.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X