சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடநாடு விவகாரம்.. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.. சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை

கொடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கிற்கான தடையை நீக்க வேண்டி இருக்கும் என்று சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kodanadu News: கொடநாடு பற்றி பிரச்சாரம் செய்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்: உயர்நீதிமன்றம்- வீடியோ

    சென்னை: கொடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கிற்கான தடையை நீக்க வேண்டி இருக்கும் என்று சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    திமுக தலைவர் ஸ்டாலின், கொடநாடு எஸ்டேட் வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி இருந்தார். தமிழக அரசு ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தது.

    பெரிய குப்பையே நீங்கதான்.. உங்களை அள்ளுவதுதான் சரியான கிளீன் இந்தியா.. சீமான் அட்டாக் பெரிய குப்பையே நீங்கதான்.. உங்களை அள்ளுவதுதான் சரியான கிளீன் இந்தியா.. சீமான் அட்டாக்

    என்ன பிரச்சாரம்

    என்ன பிரச்சாரம்

    இந்த நிலையில் கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து தனது பிரச்சாரத்தில் கொடநாடு குறித்து பேசி வந்தார். நேற்று நடந்த பிரச்சாரத்தில் கூட ஸ்டாலின் இதுகுறித்து பிரச்சாரம் செய்தார்.

    கோபம்

    கோபம்

    இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கில் புதிய திருப்பமாக ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறது. சென்னை ஹைகோர்ட் இதில், கொடநாடு குறித்து தொடர்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஹைகோர்ட் உத்தரவையும் மீறி ஸ்டாலின் கொடநாடு குறித்து பேசுவது ஏன்?.

    தடை நீக்கம்

    தடை நீக்கம்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். தொடர்ந்து ஸ்டாலின் பேச விரும்பினால் அவர் வழக்கு விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?

    கேள்வி

    கேள்வி

    ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரங்களை இந்த நீதிமன்றம் விசாரிக்கும். அரசு இது தொடர்பான ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும், என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    English summary
    M K Stalin should stop talking about Kodanadu case in his campaigns: MHC condemns.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X