சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடநாடு விவகாரத்தை எஸ்ஐடி விசாரிக்க வேண்டும்.. ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார்.

கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மர்ம மரணங்களுக்கு பின் யார் இருக்கிறார், எதனால் இந்த மர்ம மரணங்கள் நடந்தது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

M K Stalin will meet TN governor today to give a complaint on Kodanad estate murders

இந்த நிலையில்தான் மூன்று நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.

இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் குடியரசுத் தலைவரை சந்தித்து இதுகுறித்து புகார் அளிக்க போவதாக கூறினார்.

அந்த வகையில் கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். முதல்வருக்கு எதிரான ஆளுநரிடம் ஸ்டாலின் மனு அளித்தார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த சந்திப்பில் எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆர்.ராசா, டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 20 நிமிடம் நீடித்தது.

English summary
M K Stalin will meet TN governor today to give a complaint on Kodanad estate murders case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X