சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 2 பேர் கைது.. மா சுப்பிரமணியன் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அம்மா உணவகத்தில் பெயர் பலகையை அகற்றும்படி, அந்த உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய இரு திமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை முகப்பேறு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம நபர்கள், பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடினர். உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினர்.

இதனிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்" என்ற கருத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலானது.

ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்ஆசைக்கு இணங்க மறுத்த பிரேமா.. காதலன் மீது விழுந்த பழி.. கப்சிப் கலியமூர்த்தி.. பகீர் சம்பவம்

டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பலருக்கும் உணவளித்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திமுகவினர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

நடவடிக்கை எடுக்க உத்தரவு

இது மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு எட்டியது. கடும் கோபம் அடைந்த அவர், பெயர் பலகையை உடைத்தெறிந்து அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

காவல்துறையில் புகார்

காவல்துறையில் புகார்

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன் சுவற்றிலிருந்து பெயர்த்து வீசிய பெயர்ப்பலகையை அதே இடத்தில் ஒட்ட சொன்னோம். அவை ஒட்டப்பட்டன. அந்த உணவகம் அமைந்திருக்கும் காவல்துறையிடம் பகுதி செயலர் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கம்

கட்சியில் இருந்து நீக்கம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவர் மீதும் 294 பி, 427, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் எந்த பொறுப்பிலும் இல்லை என எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

English summary
ma subramanian says 2 dmk members arrested by chennai police who broke Amma unavagam in Chennai and new name board setup immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X