சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி விவகாரம்.. விசாரிக்காமலேயே ஸ்டேட்மென்ட் தர சொன்ன சக்தி எது.. மா சுப்பிரமணியன் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிர வைக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தகவல்கள்

    சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விசாரிக்காமலேயே அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பில்லை என ஸ்டேட்மென்ட் கொடுக்கச் சொன்னது யார் என திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பொள்ளாச்சியில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சமூகவலைதளங்களில் பழகி அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை வைத்து மிரட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் உறவு வைத்தும், பணம் பறித்தும் வந்தனர்.

    Ma Subramanian tweets about Coimbatore SPs comment

    இந்த நிலையில் தற்போது அந்த கும்பல் மீது திடீரென ஒரு பெண் தைரியாக புகார் கூறியுள்ளார். அதன்பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     </a></strong><a class= பொள்ளாச்சி.. காதல் நாடகத்தை நம்பாதீர்கள் பெண்களே.. ராமதாஸ் கண்டனம்! " title=" பொள்ளாச்சி.. காதல் நாடகத்தை நம்பாதீர்கள் பெண்களே.. ராமதாஸ் கண்டனம்! " /> பொள்ளாச்சி.. காதல் நாடகத்தை நம்பாதீர்கள் பெண்களே.. ராமதாஸ் கண்டனம்!

    இந்த நிலையில் கைதானவர்களுக்கு அரசியல் வாரிசுகளுடன் தொடர்பிருப்பதாலேயே அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை எஸ்பி பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி சம்பவத்தில் 100 சதவீதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என்றார். இதுகுறித்து திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை "statement" கொடுக்கச் சொன்ன சக்தி எது சார்.... என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    DMK MLA Ma Subramanian tweet that Coimbatore SP gives statement without inquiring the accused.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X