• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மா.சு "பற்ற" வைத்த தீ.. மூடநம்பிக்கையா.. இடுப்பு வலி வந்துதான் குழந்தை பிறக்கணுமா? அனலடிக்கும் களம்

Google Oneindia Tamil News

சென்னை: விரும்பிய தேதியில் சிசேரியன் பிரசவங்கள் செய்யப்படுவதை ஆஸ்பத்திரிகள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. இந்த அறிவிப்பானது, சோஷியல் மீடியாவில் இருவேறு கருத்துக்களை சுமந்து வருகிறது...!

  விரும்பிய தேதியில் இனி சிசேரியன் முறை பிரசவம் சாத்தியமில்லை - Ma Subramanian

  "ஜோதிடத்தின் அடிப்படையில் சிசேரியன் பிரசவங்களை செய்வது ரொம்பவும் தவறானது, இதே கருத்தைதான் டாக்டர்களும் சொல்கிறார்கள்.. அதுவும் இல்லாமல் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து விட்டது எனறு மா.சுப்பிரமணியன் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

  இது, நம்பிக்கை, உடல்நலம், அறிவியல், மற்றும் பெண்ணியம் சார்ந்த கலவை விஷயங்களாக பார்க்கப்பட்டு வருகிறது.. மா.சு. இப்படி அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே, சின்மயி இந்த பிரச்சனையை கிளப்பினார்..

  மாதவிடாய் வலியால் விடுப்பு எடுத்த மாணவியை கதற வைத்த பிஎஸ் சீனியர் பள்ளி ஆசிரியர்.. சின்மயி ட்வீட் மாதவிடாய் வலியால் விடுப்பு எடுத்த மாணவியை கதற வைத்த பிஎஸ் சீனியர் பள்ளி ஆசிரியர்.. சின்மயி ட்வீட்

  சுகப்பிரசவம்

  சுகப்பிரசவம்

  "சுகபிரசவமா? சிசேரியனா? என்பதை சம்பந்தப்பட்ட அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும்.. வலியை தாங்க கூடியது அந்த பெண்தான்.. அதனால் வரக்கூடிய இழப்பும் அந்த பெண்ணுக்குத்தான்.. எல்லாவற்றையும்விட, சிசேரியன் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற உரிமை அந்த தாய்க்கும் உண்டு என்று கூறியிருந்தார். சின்மயியின் இந்த கருத்து மிக முக்கியமாக பார்க்கப்பட்டு.. ஒரு சாரார் இவர் சொல்வதை சரியென்றே சொல்கிறார்கள்.

  ஆச்சரியம்

  ஆச்சரியம்

  ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் சிசேரியன் செய்வது சரி கிடையாது. விஞ்ஞானம், மருத்துவம் வளர்ந்துவிட்ட நிலையில், ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் சிசேரியன் நடப்பது ஆச்சரியத்தை தருகிறது.. அதுவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரே, இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த நொடியில் சிசேரியன் செய்யுங்கள் என்று வலியுறுத்துவது பெருகி விட்டது..

  மருத்துவர்கள்

  மருத்துவர்கள்

  இதை பெரும்பாலான டாக்டர்களால் மறுக்க முடியவில்லை... ஒருவேளை ஆபரேஷன் செய்யும் டாக்டருக்கும் இதேபோன்ற ஜாதக நம்பிக்கை இருப்பதால் இது அதிகமாகிறது.. இதுபோக சில டாக்டர்களின் வணிக நோக்கமும் இதற்கு முக்கியமான காரணம்" என்று மகப்பேறு மருத்துவர்கள் தரப்பு சொல்கிறது.

  பொதுமக்கள்

  பொதுமக்கள்

  "இது பகுத்தறிவு சார்ந்த விஷயம் கிடையாது.. ஒருவேளை சிசேரியன் என்ற ஆப்ரஷனே ஆஸ்பத்திரிகளில் இல்லாமல் போயிருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? சுகப்பிரசவத்துக்கு வழியிருந்தும், சிசேரியனை செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், சுகாதாரத்துறையினரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  முன்னோர்கள்

  முன்னோர்கள்

  ஜாதகம் பார்த்து , இந்த தேதி, இந்த நேரம், என்று கணித்து சிசேரியன் செய்து கொள்ளும் முட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? நம்ம முன்னோர்கள் எல்லாம் இப்படியா இருந்தாங்க? வெள்ளைக்காரன், நல்ல நேரம், ஜாதகம், சகுனம், பார்த்தானா? அவன் இப்படி பார்க்காததால்தான், முன்னேறி கொண்டே இருக்கிறான்.. அறுத்துதான் குழந்தை பெற வேண்டும் என்ற சங்கதியையே அறுத்தெறிய வேண்டும் என்கிறது மற்றொரு தரப்பு.

  கருத்துக்கள்

  கருத்துக்கள்

  அதேசமயம், மா.சு.வின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகளும் எழுகின்றன.. அமைச்சர் சொல்வதுபோல், எல்லா பெண்களுக்குமே சுகப்பிரசவம் நடந்து விடாது.. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உடம்பில் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.. தவிர்க்க முடியாத பட்சத்தில், தாய்க்கும் - சேய்க்கும் உயிருக்கே ஆபத்து என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும்..

  சிசேரியன்

  சிசேரியன்

  அதுவும், எந்த நோயாளிக்கு சிசேரியன் செய்கிறோம் என்பதை அந்தந்த ஆஸ்பத்திரியில் உள்ள நோட்டீஸ் போர்டுகளில் அறிவிக்க வேண்டும்.. இது எல்லாவற்றையும்விட வலியும் வேதனையும் முழுக்க முழுக்க அந்த பெண் சம்பந்தப்பட்டது.. "என்னால் வலி பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்று ஒரு பெண் கதறி அழுதால் என்ன செய்ய முடியும்? அல்லது வலிக்கிறது என்று ஒரு பெண் சொல்லவே கூடாதா?

  வலி

  வலி


  இடுப்பு வலி ஏற்பட்டு, உயிர் போய் உயிர் வந்து, மறுஜென்மம் எடுத்து குழந்தை பெற்றால்தான், அவள் தாய்மை பூர்த்தியாகிறது என்ற பழமைவாதத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும்.. அதேபோல, தன் குழந்தை இந்த நேரத்தில்தான் பிறக்க வேண்டும் என்று ஒரு தாய் விரும்புவதில் எந்த தவறுமில்லை.. ஆக, வலியோ, ஜாதகமோ, எந்த காரணமாக இருந்தாலும், அது பெண்ணின் முழு உரிமை சம்பந்தப்பட்டது "என்ற கருத்துக்களும் வலுவாக எழுகின்றன.

  English summary
  Ma Subramanians statement and Women can choose to have C-Section for multiple reasons
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X