சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மாதவரத்தில் 2வது நாளாக தொடர்ந்து எரியும் தீ.. விடிய விடிய போராடிய வீரர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாதவரத்தில 15 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீயை அணைக்க விடிய விடிய தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த விபத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மாதவரத்தில் பெரும் தீ விபத்து.. அணைக்க முடியாமல் திணறல்

    சென்னையை அடுத்த மாதவரம் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த பழைய லாரிகள் மீது பரவியது. பின்னர் தீ அந்த பகுதி முழுவதும் பயங்கரமாக பரவியது. வானுயர்ந்த அளவில் கொளுந்துவிட்டு தீ எரிய தொடங்கிதால் பாதுகாப்புக்காக சென்னை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    madhavaram fire accident : fire Fighters try to To extinguish the fire

    இந்த தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து ஏராளமான வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய தீயை அணைக்க போராடி வருகிறார்கள். சுமார் 15 மணி நேரத்திற்கு மேல் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

    தீயணைப்பு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில, மாதவரம் ரசாயனக்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணி நடந்து வருகிறது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தீயணைப்பு பணி மீண்டும் தொடங்கி உள்ளது. அதிகபட்சம் இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுமையாக தீ அணைக்கப்படும் என்றார்கள்.

    English summary
    Fire breaks out at oil warehouse in Chennai's Madhavaram area : 12 fire Fighters try to To extinguish the fire in more then 15 hours
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X