சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை தவிர மத்த எல்லாருக்கும் டெபாசிட் காலியாமே!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறனை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சாம்பால் போட்டியிட்டார்.

Madhya Chennai Dhayanidhi Maran won: all other candidates lost deposits

இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி தமிழகத்தில் 37 நாடாளுமன்ற தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தயாநிதி மாறன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற தயாநிதி மாறன் 4,47,150 வாக்குகளும் தோல்வி அடைந்த பாமக வேட்பாளர் சாம்பால் 1,46,713 வாக்குகளும், பெற்றனர்.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததாக கூறப்படுகிறது.

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..! கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

English summary
Madhya Chennai Dhayanidhi Maran has won. all other candidates lost their deposits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X