சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை தினம்..களைகட்டப்போகும் கலை நிகழ்ச்சிகள்..பெசன்ட் நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சென்னையின் 383-வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Madras Day : Chennai-ல் இதுவரை கொண்டுவரப்பட்ட சிறந்த திட்டங்கள்

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் பொருட்டு 'மெட்ராஸ் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

    Madras day 2022:Chennai day celebration Traffic diversion at Besant Nagar

    மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

    நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர்.

    தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக இருக்கிறது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய கட்டங்களை கொண்டிருக்கிறது.

    வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி, சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்தாண்டு சென்னையின் 383-வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நாளை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்! அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!

    ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாலை 6 மணி வரை பெசன்ட் நகரில் 7ஆவது நிழற்சாலையில் இருந்து 6ஆவது நிழற்சாலை வரை, எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்கள் அனைத்தும் 16ஆவது குறுக்குத் தெரு வழியாக 2ஆவது நிழற்சாலை நோக்கி திருப்பிடவிடப்பட உள்ளது. 3ஆவது மெயின் ரோட்டில் இருந்து 6ஆவது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 3ஆவது மெயின் ரோடு மற்றும் 2ஆவது நிழற்சாலை சந்திப்பில் வாகனங்கள் அனைத்து திருப்பிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Corporation is planning to organize 2 days of art programs at Besant Nagar Beach on the occasion of Chennai Day. Chennai Day is celebrated on 22nd August every year. Chennai's 383rd birthday is going to be celebrated this year. Dance programs will be held at the Besant Nagar beach area from tomorrow evening to Sunday midnight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X