சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை தினம்: 380 | இது நம்ம சென்னை ! | Chennai day

    சென்னை: ஆரம்பத்தில் சென்னப்பட்டினம் மற்றும் மெட்ராஸ்பட்டினம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரம் ஒரு காலகட்டத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கும், 1990ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் அதற்கு முந்தைய கிட்ஸ் அனைவருக்கும் இயல்பாகவே மெட்ராஸ் என்பதுதான் வாயில் வரும். சென்னை என்பது வலிந்து திணித்த பெயரை போலதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

    சென்னை மாநகரம் இன்று தனது 380வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாக கருதி, இதையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள்.

    சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004 இல் மெட்ராஸ்டே கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. சிட்டிசன்கள் உற்சாகத்தால், இப்போது இந்த கொண்டாட்டம், ஒரு வாரத்திற்கு நீண்டு பெருகியுள்ளது. இந்த கொண்டாட்டத்தில், பாரம்பரியம் போற்றுதல், உணவு வகைகளை கொண்டாடுதல் உள்பட பல்வேறு முன்னெடுப்புகளை மக்கள் பின்பற்றுவார்கள்.

    இதோ டிவிட்டரில் சென்னையன்ஸ் என்ன சொல்லி கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்:

    அடையாளம் வழங்கிய நகரம்

    பலருக்கு வேலை, வாழ்க்கை, புகழ் மற்றும் அடையாளத்தை வழங்கிய நகரம். 380 ஆண்டுகள் மற்றும் இன்னும் வலுவாக செல்கிறது, எங்கள் அற்புதமான நகரத்தை கொண்டாடுங்கள்.!!

    உங்க தாத்தா

    உங்க தாத்தா மதுரை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறது என்கிறார் இந்த மதுரை சிட்டிசன். பழம்பெரும் நகரம் மதுரை என்பதால் இப்படி சொல்கிறார் போலும்.

    உண்மையான அழகு

    சில விஷயங்கள் மாற்றப்படாமல் விடப்படுகின்றன, இடிக்காமல் பாதுகாப்பதில் உண்மையான அழகு இருக்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெட்ராஸ்

    பலர் வாழ்க்கை மாற்றம்

    மெட்ராஸ் நகரத்திற்கு 380 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். மில்லியன் கணக்கான உயிர்களை மாற்றிய நகரம் இது என்கிறார் இந்த நெட்டிசன்.

    சிறப்பான நகரம்

    மற்ற நகரங்களைவிட சென்னை தனித்து காணப்படுவது எப்படி? என்னை பொறுத்தவரை: கடற்கரை, பாரம்பரிய உணவு, கணிக்க முடியாத வானிலை, பாதுகாப்பு, இசை மற்றும் கோயில்கள். சென்னையில் பிறந்ததற்கு நான் பாக்கியவானாக உணர்கிறேன்!

    ஏரியா பாருங்க

    பக்தி-திருவல்லிக்கேணி, சாந்தோம், ஷாப்பிங்- தி-நகர், தியேட்டர்- சத்யம், பீனிக்ஸ், கலை-மகாபலிபுரம், ஃபில்டர் காஃபி - மேற்கு மாம்பலம்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சென்னை.
    இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    The city of Chennai is celebrating its 380th birthday today. Assuming that the city of Chennai was formally built on August 22, 1639, they made it the birthday of the city.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X