சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைகளில் மாமூல்- அன்பளிப்பு வாங்கும் போலீஸார் மீது எப்ஐஆர்.போட்டே ஆகணும். கறராக கண்டித்த ஐகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: கடைகள் மற்றும் சந்தைகளில் மாமூல் மற்றும் அன்பளிப்பு வாங்கும் போலீஸார் மீது எப்ஐஆர் போடுவதை உள்துறை செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைகளில், மார்க்கெட்டுகளில், உணவகங்களில் போலீசார் மாமூல் மற்றும் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருவது சராசரியான நிகழ்வாகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் பொதுமக்களிடம் இருந்து கேட்பதை நாம் அதிகம் பார்த்திருப்போம்.

Madras HC directs Home Secretary to ensure registration of FIRs against police officers accused of collecting ‘Mamool’ & freebies from markets

இப்போது போலீசார் லஞ்சம் மற்றும் மாமூல் வாங்குவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றமே வலியுறுத்தி உள்ளது.

உடைகிறது தெலுங்குதேசம்- பாஜகவுக்கு தாவும் 4 ராஜ்யசபா எம்.பிக்கள்- எம்.எல்.ஏக்களும் எஸ்கேப்? உடைகிறது தெலுங்குதேசம்- பாஜகவுக்கு தாவும் 4 ராஜ்யசபா எம்.பிக்கள்- எம்.எல்.ஏக்களும் எஸ்கேப்?

இன்று வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது உணவகங்கள், மார்க்கெட்டுகள், காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகள், மட்டன் கடைகள், சிக்கன் கடைகள் உள்பட வணிக தளங்களில் மாமூல் மற்றும் அன்பளிப்பு வாங்கும் போலீசாருக்கு எதிராக எப்ஐஆர் போட வேண்டும் என்றும் அதனை உள்துறை செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

போலீஸ் மாமூல் வாங்குவதை தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் போலீசாரை கிண்டல் செய்து மீம்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த மீம்களும் வைரலாகி வருகிறது.

English summary
Madras HC directs Home Secretary to ensure registration of FIRs against police officers accused of collecting ‘Mamool’ & freebies from restaurants, markets, vegetable shops, fish market, mutton stall, chicken stall etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X