சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தலாம்... தடையை நீக்கிய நீதிபதி சத்யநாராயணன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை : டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தொகுதியில் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி சத்யநாராயணன் கூறியுள்ளார்.

    அதிமுக பிளவுபட்டதையடுத்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் அணியில் இணைந்த 18 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

    Madras HC judge Sathyanarayanan uplifted the ban to conduct elections for 18 constituencies

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு 2 விதமான தீர்ப்புகளை வழங்கியதால் இறுதித் தீர்ப்பை 3வது நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதித் தீர்ப்பு அளித்த நீதிபதி சத்யநாராயணன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பையே உறுதி செய்தார். சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று அறிவித்தார். மேலும் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் விதித்த தடையை நீதிபதி சத்யநாராயணன் விலக்கியுள்ளார். இதனால் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த இருந்த தடை நீங்கியுள்ளது.

    English summary
    18 MLAS disqualification judgement case : Justice Sathyanarayanan uplifts the ban to conduct byeelections in these 18 constituencies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X