சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு

ரூ.2000 திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தலாம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசின் ரூ. 2000 திட்டத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு- Oneindia Tamil

    சென்னை: தமிழக அரசின் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    அதன்படி இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும் மக்களுக்கு அந்த நிதியுதவியை கொடுப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

    டிவி சீரியல்களால் தான் குடும்ப உறவு சிதறிப் போகிறது... குட்டு வைத்த சென்னை ஹைகோர்ட்டிவி சீரியல்களால் தான் குடும்ப உறவு சிதறிப் போகிறது... குட்டு வைத்த சென்னை ஹைகோர்ட்

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். ஆனால், அனைத்து தரப்பினருக்கும் பணத்தை தந்து கொண்டிருக்கிறார்கள்.

    அரசாணை

    அரசாணை

    மேலும் நிதியுதவி சேர 7 பேர் கொண்ட குழு என்று கூறி விட்டு, 9 பேர் கொண்ட குழு என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசாணை திருத்தியது சம்பந்தமாக மக்களுக்கு முறையான எந்த தகவலும் வரவில்லை. அதனால் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    அமர்வு

    அமர்வு

    இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பினை நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு வழங்கியது.

    தள்ளுபடி

    தள்ளுபடி

    அதில், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி கருணாநிதி தாக்கல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    English summary
    Madras HC Judgement for TN's Rs 2000 Scheme for poor
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X