சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூர் சிறையில் முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பு ஏன்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

Madras HC questions on Nalini-Murugan meeting in Prison

இதனால் சிறையில் முருகன் ஜூன் 1-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்து பேச அனுமதி வழங்க கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

 வயலூர் முருகன் உள்ளிட்ட கோயில்கள் முன்பு ஒற்றை காலில் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் வயலூர் முருகன் உள்ளிட்ட கோயில்கள் முன்பு ஒற்றை காலில் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர்

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, சிறைவிதிகளின் படி, இருவரையும் சந்தித்து பேச கூட அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

English summary
The Madras High Court today asked that Why Tamilnadu Govt not allow to meet Nalini and Murugan in Prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X